இணையத்தில் நாள்தோறும் வைரலாகும் வீடியோக்களில் அதிகமாக பார்க்கப்படுவது பாம்பு. அவற்றின் நடமாட்டம் மற்றும் சீண்டல்கள் வீடியோ மக்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது. வீடியோ பார்ப்பவர்கள் கூட பாம்பு வீடியோவை ஒருவித அச்ச உணர்வுடனேயே பார்ப்பார்கள். காரணம், பாம்பு மீது மனிதர்களுக்கு இருக்கும் பயம். 100 அடி தொலைவில் பாம்பு செல்வதை பார்த்தால்கூட, அந்த வழியில் செல்வதை தவிர்த்து வேறு வழியில் செல்பவர்கள் இன்னும் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உனக்கொரு வாய்..எனக்கொரு வாய்..உணவை பகிரும் பூனைகளின் வைரல் வீடியோ!


ஆனால், எல்லா பாம்புகளும் விஷம் கொண்டவையா? என்றால் இல்லை. ஒரு சில பாம்புகளுக்கு விஷமிருக்காது. இருந்தாலும், விஷம் உள்ள பாம்பு எது? விஷமில்லா பாம்பு எது? என்பது எல்லோருக்கும் தெரிந்திருப்பதில்லை. மேலும், பாம்பு என்பதை கேள்விபட்டவுடனேயே, ஓடத்தான் முதலில் பார்ப்பார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா?. பாம்புகள் முதலில் மனிதர்களை எப்போதும் தாக்க விரும்பாது. தன்னை தற்காத்துக் கொள்ளவதற்காக ஓட முற்படும். அந்த நேரத்தில் நம் கை, கால்கள் படும்போது தீண்டிவிடும். 



பாம்புகளின் முதல் இலக்கு அவற்றின் இரை மட்டுமே. தவளை, எலி உள்ளிட்டவைகளை குறிப்பாக அவை குறி வைத்து சாப்பிடும். அவ்வாறு தவளை ஒன்றை குறி வைத்து தாக்க முற்படும்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. வீட்டு கேட்டின் மீது இருக்கும் தவளையை கருநிற பாம்பு வாயால் கவ்விவிடுகிறது. இதனை உணர்ந்து கொண்ட தவளை, பாம்பிடம் இருந்து தப்பிக்க விடா முயற்சி செய்கிறது. 2 நிமிடங்களுக்கு மேல் தொடர் முயற்சி செய்யும் தவளை ஒரு வழியாக பாம்பிடம் இருந்து தப்பித்து ஓடிவிடுகிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உயிர்போகும் ஆபத்து வந்தால்கூட விடா முயற்சியுடன் செயல்பட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை தவளை உணர்த்தியிருப்பதாக இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 


மேலும் படிக்க | ஓட்டம் பிடித்த காட்டு ராஜா: மாஸ் காட்டிய யானைகள், எஸ்கேப் ஆன சிங்கங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR