Funny Wedding Photoshoot Viral Video : தற்போது திருமணத்தின் போது எடுக்கப்படும் போட்டோஷூட்கள் பல பரிமாணங்களை அடைந்துவிட்டது. திருமண விழாவின் ஒவ்வொரு சடங்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் புகைப்படம் எடுக்க மட்டுமே செலவிடப்படுகின்றன. திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட், பெண் அழைப்பு, மெஹந்தி நிகழ்ச்சி, திருமண போட்டோஷூட், திருமணத்திற்கு பிந்தயை போட்டோஷூட், ஹனிமூன் போட்டோஷூட் என வகை வகையாக புகைப்படத்தொகுப்புகள் உருவெடுத்தவிட்டன. மேலும், பெரும்பாலனோர் ஒவ்வொரு போட்டோஷூட்டுக்கும் ஒவ்வொரு இடத்தில் நடத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போட்டோ மட்டுமின்றி வீடியோ, ட்ரோன் வீடியோ என மிக சாதரண திருமண விழாக்களில் கூட கலக்கிறார்கள் நம்மூர் ஸ்டூடியாக்காரர்கள். இவையனைத்திற்கும் இந்தியாவில் விதைப்போட்டது வெளிநாடுகள் தான். வெளிநாடுகளில் இதுபோன்ற போட்டோஷூட்கள் அதிகம் நடைபெறுகின்ற நிலையில், படப்பிடிப்பின்போது போது நிகழும் யதேர்ச்சையான நிகழ்வுகளையும் வீடியோவாக வெளியிடும் நடைமுறை உருவானது. 


மேலும் படிக்க | மேடையில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்


திட்டமிடப்படாத, படப்பிடிப்பு தளத்தில் திடீரென நிகழும் மேஜிக்குகள்தான் இந்த வீடியோக்களின் ஸ்பெஷாலிட்டி. அந்த வகையில், ஒரு ஜோடி திருமண போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கும்போது, திடீரென ப்ரேமிற்கு வந்து மேஜிக் செய்த தாய் குரங்கு மற்றும் குட்டி குரங்கின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது


இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில்,"நம்பவே முடியவில்லை, இதை வீடியோகிராபர் படம்பிடித்தார் என்பதை. என்ன ஒரு அற்புதமான காட்சி!!. மனதிற்கு நெருக்கமான ஒன்று. குட்டி அதன் முதுகில் உள்ளது" என்ற கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், வீடியோவில்,"உங்கள் திருமண போட்டோஷூட்டை கெடுக்கும் குரங்கு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவும்" என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது. 


வைரலாகி வரும் அந்த வெட்டிங் போட்டோஷூட் வீடியோ:



அந்த ஜோடி முதலில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு தாய் குரங்கு தனது குட்டியின் ஜோடியின் பக்கத்தில் வந்தது. அதனை கண்டதும் இருவரும் சற்று திகைத்துவிட்ட நிலையில், அந்த குரங்கு மணமகன் கையை பிடித்து அவர் மீது தாவி ஏறிக்கொண்டது. 


அந்த குரங்கு அவர்களை பயத்தை ஏற்படுத்தாமல் நிதானமாக இருந்ததால், மணமகன் முதலில் நிதாமனாக இருந்து அந்த தாய் குரங்கிற்கு ஒத்துழைத்தார். தொடர்ந்து, மணமகளும் நிதானத்திற்கு வந்து தாய் குரங்கையும், அதன் குட்டியையும் கொஞ்சினார். சிறிதுநேரத்திற்கு அவை மணமகனிடம் இருந்து இறங்கி, அவர்களின் போட்டோஷூட்டை நடத்த வழிவிட்டது. 


தங்களுக்கு முன் நிகழ்ந்த அந்த அதிசயத்தை யோசித்தவாரே அவர்கள் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துகொள்கின்றனர். பார்ப்பவர்களை பரவசப்படும் அந்த வைரல் வீடியோவிற்கு பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | காட்டெருமையை வேட்டையாடி வெற்றி கம்பீரமான சிங்கத்தின் கர்ஜனை வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ