வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போலவே நடத்தப்படுகின்றன. இது பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களில் மணமக்களின் அன்பு, பாசம், கோவம், காதல் என இவை எல்லாம் காணப்படுகின்றன. மறுபுறம் திருமணத்து வருபவர்கள் செய்யும் அளப்பறைகளுக்கும் அளவே இல்லை.


பெரும்பாலான மக்கள் ஒரு விசேஷ நோக்கத்துடன் ஒரு திருமணத்திற்கு அல்லது விருந்துக்கு செல்கிறார்கள். அந்த நோக்கம் ருசியான உணவை சாப்பிடுவதுதான். பொதுவாக திருமணத்தை, அதில் நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக அனுபவிக்கும் உற்சாகம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். மற்ற அனைவரும் நண்பர்களுடன் பேசி மகிழவும், நீண்ட நாள் கழித்து பல சொந்தங்களை சந்திக்கவும், முக்கியமாக ருசியாக சாப்பிடவும்தான் திருமணத்திற்கே வருகிறார்கள். 


இப்படி இருக்க, திருமணங்கள் திறந்த வெளியில் நடந்து, மழை பெய்தால் பெரும் சிக்கல்தான். இப்படிப்பட்ட தருணங்களில் மழை மீது கூட கோவம் வருவதுண்டு. அப்படி மழை வந்து படுத்திய ஒரு திருமண வீடியோதான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஆனால், மழை வந்தாலும் தாங்கள் நினைத்ததை முடிக்கும் சிலரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். 


ஒரு திருமண விழாவில் சிலர் விருந்து சாப்பிட அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த நேரத்தில் அங்கு பலத்த மழை பெய்யத் தொடங்குகிறது. பொதுவாக மழை பெய்தால் மக்கள் நனையாமல் இருக்க அங்கும் இங்கும் ஓடுவதைக் காண்போம். ஆனால் இந்த வீடியோவில் மழையால் கூட மக்களை அவர்களது இலக்கில் இருந்து திசை திருப்ப முடியவில்லை. கனமழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் உறுதியாக நிற்பதை வீடியோவில் காணலாம். மழையைத் தவிர்க்க, மக்கள் திருமணங்களில் பயன்படுத்தப்படும் மெத்தைகளால் தலையை மூடிக்கொள்கிறார்கள். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் இப்படியே செய்கிறார்கள். எப்படியாவது வந்த நோக்கம், அதாவது விருந்து சாப்பிடுவது நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணமே அனைவரிடமும் இருக்கிறது. 


மேலும் படிக்க | முன்ஜென்மத்தில் இந்த மாடு என்ஜினியரா இருந்திருக்குமோ? - வைரல் வீடியோ


மழைக்கே சவால் விடும் விருந்தினர்கள்


இந்த திருமணத்திற்கு வந்துள்ள விருந்தாளிகள் மழைக்கே டஃப் கொடுக்கிறார்கள். அடாது மழை பெய்தாலும், அசையாமல் அமர்ந்து சாப்பிடுவோம் என சொல்லாமல் சொல்கிறார்கள். இது இந்த வீடியோவை பார்த்தாலே புரிகின்றது. இவர்கள் உணவை சுவைப்பதை மழையால் கூட தடுக்க முடியவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனினும், சில பயனர்கள் இது ராஜஸ்தானில் எங்கோ எடுக்கப்பட்டதாக கூறி வருகின்றனர். 


வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் kemcho_gukrati என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஏகப்பட்ட வியுஸ் இதற்கு கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், 'என்ன நடந்தாலும், இலவச சாப்பாட்டை விட முடியுமா?' என எழுதியுள்ளார். மற்றொரு பயனர், 'மழை பெய்தால் பெய்யட்டும்.. ஆனால் அதற்காக சாப்பாட்டை விட மாட்டோம்' என கமெண்ட் செய்துள்ளார். 


மேலும் படிக்க | மாமியாருடன் மாப்பிள்ளையின் குத்தாட்டம்... ஷாக்கில் மணமகள்.. நாமும்தான்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ