இதுதான் அந்த சொப்பனசுந்தரி வெச்சிருந்த நாயா? இப்படி ஆடுது!! வைரல் வீடியோ

Dog Dance Video: இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். நாயின் ஆட்டம் அப்படி இருக்கிறது.... நீங்களே பாருங்கள்!! 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2023, 04:39 PM IST
  • நடனமாடும் நாய்.
  • மாஸாக டான்ஸ் ஆடும் நாயின் நடனத்தை இங்கே காணலாம்:
  • இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
இதுதான் அந்த சொப்பனசுந்தரி வெச்சிருந்த நாயா? இப்படி ஆடுது!! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்கு, நாய், பூனை, யானை, பாம்பு ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் தனி இடம் உள்ளது. இவற்றின் வீடியோகளுக்கென இணையவாசிகளிடம் தனி க்ரேஸ் உள்ளது. சமூக ஊடகங்களில் இவற்றின் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரல் ஆகின்றன. 

வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் நாய்களுக்கே முதலிடம். நாய்க்கும் மனிதனுக்கும் இடையிலான நட்பு அலாதியானது. நாய் நன்றியுள்ள விலங்காக இருப்பதோடு, அது வளர்க்கப்படும் வீடுகளில் அது வீட்டின் உள்ள ஒரு நபராகவே பார்க்கப்படுகின்றது. தற்போது ஒரு நாயின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் நமது சிரிப்பை கண்டிப்பாக அடக்க முடியாது. 

மேள தாளத்துக்கு மக்கள் இடுப்பை அசைத்து நடனமாடுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், ஒரு நாய் நடனமாடி பார்த்திருக்கிறீர்களா? பார்த்தில்லை என்றால் இந்த வீடியோவில் அதை ஆசை தீர காணலாம். இதை பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகை பூக்கும். உங்களால் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் லூப்பில் பார்க்காமல் இருக்க முடியாது. 

நடனமாடும் நாய்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நாய் ஒன்று மாஸாக டான்ஸ் ஆடுவதை காண முடிகின்றது. இதில் எங்கோ மேளம் கொட்டும் ஓசை கேட்ட உடனேயே நாய் தன்னை மறந்து ஆடத் தொடங்குவதை காண்கிறோம். மேள சத்தத்தை கேட்ட உடனேயே அதன் கால்கள் தானாக ஆடுகின்றன. வீடியோவை பார்த்தால் நாயால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றும் அது தன்னை மீறி குத்தாட்டம் போடுவது போலவும் தோன்றுகிறது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் நடனமாடுபவர்கள் அனைவரையும் இந்த நாய் தன் நடனத்தால் தோற்கடித்துவிடும் போல் இருக்கிறது.

மேலும் படிக்க | மேடையில் மணமக்கள் செய்த வேலை.. யார் தடுத்தும் நிறுத்தல: வேற லெவல் வைரல் வீடியோ

மாஸாக டான்ஸ் ஆடும் நாயின் நடனத்தை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rawat Ji (@rawat783824)

இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள் 

நாய் தனது நான்கு கால்களை மட்டும் அசைக்கவில்லை, உடலையே அசைத்து டான்ஸ் ஆடுகிறது, அதுவும் மிக அழகாக ஆடுகிறது. இந்த வீடியோவில் இருக்கும் நாய் மிகவும் சுறுசுறுப்பாகவும், திறமையுடனும் இருப்பதை தெளிவாக காண முடிகின்றது. இந்த விடியோ இன்ஸ்டாகிராமில் rawat783824 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏஜ்கப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘அந்த நாயின் மொபைல் நம்பர கொஞ்சம் அனுப்புங்கபா...’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘என் நண்பனின் திருமணம் வருகிறது. நடனமாட இந்த நாயைதான் அழைக்கப்போகிறேன்’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘இது தான் சூப்பர் டாக்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், 'இது கால்களைத் துடைக்கும் புதிய பாணி' என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | இதென்னடா கராத்தே மாஸ்டருக்கு வந்த சோதனை - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News