வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன, பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் பல வேடிக்கையான விஷயங்கள் நடப்பதுண்டு. சில நேரம் மணமக்களே இந்த வேடிக்கைக்கு காரணமாகிறார்கள். சில நேரம் திருமணத்துக்கு வந்துள்ள உறவினர்களோ அல்லது நண்பர்களோ நாம் சற்றும் எதிர்பாராத சில விஷயங்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.


தற்போதும் அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மணமகனின் தோழர்கள் செய்யும் ஒரு விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் செய்த செயலால் மணமகளும் ஆடிப்போய்விட்டார். 


மேலும் படிக்க | இந்த பாடு படுத்திறீங்களே! டேய் நான் பாம்புடா? கொஞ்சமாவது மதிங்க! கெஞ்சல் வீடியோ வைரல்


மாப்பிள்ளையிடம் நக்கல் செய்த நண்பர் கூட்டம்


சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் மணமக்கள் மணமேடையில் நின்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. அவர்களுக்கு வாழ்த்து சொல்ல, ஒவ்வொருவராக மேடைக்கு வருகிறார்கள். அப்போது மணமகனின் ஒரு தோழனும்  வாழ்த்து கூற மேடையேறுகிறார். ஆனால், அவர் மணம்கான் முன்னிலையிலேயே மணமகளை கடுப்பேற்றினார். மணமகளுக்கும் இந்த செயலால் கோவம் வருகிறது என்பது அவரது முகத்திலிருந்தே தெரிகிறது. மணமகனின் நண்பன் மேடையை அடைந்தவுடனேயே இருவருக்கும் இடையில் நின்றுவிடுகிறார். மெதுவாக மாப்பிள்ளையை ஒரு பக்கமாக அவர் அழைத்துச்செல்கிறார். மாப்பிள்ளை தனது நண்பனுடன் செல்வதை பார்த்து மணமகளும் பின்னால் நகர்கிறார். 


மணமகள் நகர்ந்து சென்ற பிறகு, மாப்பிள்ளையின் தோழன்,  தனது மற்ற நண்பர்களையும் மேடைக்கு அழைத்தது இன்னும் வேடிக்கையாக உள்ளது. பல நண்பர்கள் மேடையில் வருவதைப் பார்த்து, மணமகள் ஷாக் ஆகிறார். சிறிது சிறிதாக நகர்ந்து அவர் மேடையின் ஓரத்திற்கே சென்று விடுகிறார். மேடையின் மற்றொரு ஓரத்தில் மாப்பிள்ளையை நிற்கவைத்த நண்பர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் நண்பர்களின் நக்கல் சற்று அதிகமாகவே போய்விட்டது என்றுதான் கூற வேண்டும். 


மணமக்கள் வீடியோ வைரலாக பரவியது



மணமக்களுடன் நண்பர்கள் கேலி செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ indianweddingpage என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துவருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | காட்டில் கேக் வெட்டிய நபர், அபேஸ் செய்த குரங்கு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ