கீரிக்கும் பாம்புக்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத முடிவு, வைரல் வீடியோ

Snake Mongoose Fight Video: பாம்பு இப்படி பல்பு வாங்கிய வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது!! மிக அரிதான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2023, 12:43 PM IST
  • படம் எடுத்த பாம்பை பணிய வைத்த கீரி.
  • அசால்டாக பாம்பை சமாளித்த கீரிப்பிள்ளை.
  • பாம்பை பந்தாடிய கீரியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்.
கீரிக்கும் பாம்புக்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத முடிவு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. பாம்பு ஒரு அபாயகரமான விலங்கினம். இதை கண்டால் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே எண்ணுவார்கள். அப்படிப்பட்ட பாம்பை எந்த வித ஆபத்தும் இல்லாமல் அருகில் காண இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று மிருகக்காட்சி சாலை, மற்றொன்று சமூக ஊடகம். பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. 

தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வெளிவந்துள்ளது. இதில் பாம்பும் கீரிப்பிள்ளையும் சண்டையிடும் காட்சி காணப்படுகின்றது. இதில் காண்பது போன்ற காட்சிகளை நம்மால் அவ்வளவு சுலபமாக பார்த்துவிட முடியாது. இந்த வீடியோ பகிரப்பட்ட உடனேயே இணையத்தில் வைரல் ஆனது. 

அசால்டாக பாம்பை சமாளித்த கீரிப்பிள்ளை 

சில நொடிகள் கொண்ட வீடியோவில், பாம்பு இரை தேடி அங்கும் இங்கும் சுற்றித் திரிவதை காண முடிகின்றது. ஆனால், இரைக்கு பதிலாக அதன் முன்னால் ஒரு ஆபத்தான கீரி வந்துவிடுகிறது. இருப்பினும், கீரி சிறியதாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, பாம்பு பின்வாங்காமல் தாக்க திட்டமிட்டது. ஆனால் தான் தவறு செய்துவிட்டோம் என்பது அதற்கு பிறகுதான் தெரிகிறது. பாம்பு தாக்கியவுடன், கீரி ஒரு வலுவான எதிர்தாக்குதலை நடத்தியது. பாம்புக்கு ஒன்றும் புரியாத அளவுக்கு அதன் சூழ்ச்சி இருந்தது.

மேலும் படிக்க | மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: ‘அவனா நீ?’ என திகைத்த மணமகள், வைரல் வீடியோ

படம் எடுத்த பாம்பை பணிய வைத்த கீரி 

அந்த அதிர்ச்சி வீடியோவில், பாம்பு கீரியைத் தாக்கியவுடன், அந்த கீரி தோட்டாவின் வேகத்தில் காற்றில் குதித்ததைக் காண முடிகின்றது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, கீரி மீண்டும் தரையில் வருவதற்கு முன்பே பாம்பின் முகப்பகுதியை வலுவாக பிடித்ததுக்கொண்டது. அதன் இந்த புத்திசாலித்தனமான தாக்குதல் எவ்வளவு ஆபத்தானது என்றால், அதன் பின்னர் பாம்பால் ஒன்றும் செய்ய முடிய்வைல்லை. கீரி இந்த வகையில் நாகப்பாம்பை எளிதில் தோற்கடித்து வேட்டையாடியது.

பாம்பை பந்தாடிய கீரியின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

பாம்பு கீரிப்பிள்ளை இடையில் நடக்கும் சண்டையின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் beautiful_new_pix என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | காட்டெருமை கூட்டத்துக்குள் புகுந்து குட்டியை தூக்கும் சிறுத்தையின் கம்பீர வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News