வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


பொதுவாக பலதரப்பட்ட மக்களுக்கும் பிடித்த உணவு வகைகளில் ஆம்லெட்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. மிக விரைவாக செய்து விடலாம் என்பதும், மிகவும் ருசிகரமான எளிமையான உணவு என்பதும் இதன் சிறப்பம்சங்கள். மக்கள் ஆம்லெட்டை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். 


பலர் பல விதங்களில் ஆம்லெட்டை செய்கிறார்கள். ஆனால் கோழி முட்டைக் கொண்டு ஆம்லெட் செய்யும் போது அதிலிருந்து கோழிக்குஞ்சு வெளிவரும் காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா? இல்லையென்றால் இந்த வீடியோவில் அதை பார்த்துவிடலாம்!!


ஒரு கடையில் ஆம்லெட் போடும் நபர், அதற்காக முட்டையை எடுத்த உடனேயே அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் இந்த காட்சியை மீண்டும் மீண்டும் காண முடிகின்றது. அந்த நபர் ஒவ்வொரு முறை ஆம்லெட் போட முட்டையை உடைக்கும்போதும் அதிலிருந்து ஒரு கோழிக்குஞ்சு வெளியே வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தால், முதலில் அனைவருக்கும் ஆச்சரியம் வருகிறது. இப்படிக்கூட நடக்குமா என இந்த வீடியோ அனைவரையும் சிந்திக்க வைகிறது. பலரால் இதை நம்ப முடியவில்லை. 


மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ 


அமர்க்களப்படுத்தும் ஆம்லெட் வீடியோ 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஆம்லெட் செய்யும் நபருக்கு அருகில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது. ஒரு வாடிக்கையாளரின் ஆர்டருக்காக அந்த நபர் ஆம்லெட் செய்ய முட்டையை உடைத்தவுடன், அதிலிருந்து குஞ்சு வெளியே வந்து சட்டியில் விழுகிறது. ஒருமுறை மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் இப்படி நடக்கிறது. குஞ்சு வெளியே வந்தவுடன், ஆம்லெட் செய்யும் நபர் அதை எடுத்து மற்றொரு நபரிடம் கொடுக்க அவர் அதை பிடித்துக்கொள்கிறார். இந்த காட்சியைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்துப்போகிறார்கள். 


அந்த ஆம்லெட் அலப்பறை வீடியோவை இங்கே காணலாம்:


 



வீடியோவுக்கு குவியும் கமெண்டுகள் 


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


சிலர் இதற்கு வேடிக்கையாகவும், சிலர் கண்டன தொணியிலும் கமெண்ட் செய்து வருகின்றனர். எனினும், இந்த வீடியோ நம்பும்படியாக இல்லை என்றே பலரும் கூறி வருகிறார்கள். நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால் இதைப் பார்த்தால் கண்டிப்பாக சில நொடிகளுக்கேனும் நம் கவலைகளை மறந்து சிரிக்கத் தோன்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


மேலும் படிக்க | அப்பாவி சிறுவனை நெருங்கிய ஆபத்தான மலைப்பாம்புகள்: அங்க வந்த ட்விஸ்டால் வைரலான வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR