சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், அசில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எண்ணிலடங்காத வீடியோக்கல் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன.  அதிலும் காட்டு வாழ்க்கையை காட்டும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அதிலும் யானைகள் குறிப்பாக, குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், குட்டி யானை ஒன்று அங்கும் இங்கும் ஓடி, ஒரு நபரை மிகவும் சிண்டுவதை காணலாம். அந்த சீண்டலை அந்த நபரும் ரசிக்கிறார் என்பதையும் அந்த வைரல் வீடியோவில் நாம் உணரலாம். வனத்துறையை சேர்ந்த அதிகாரி சுஷாந்த அநந்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பகிரப்பட்டதில் இருந்து இது வரை 67.1K பார்வைகளை பெற்றதுடன், பலர் யானையின் இந்த செயலை மிகவும் ரத்து கருத்துக்கள் பலவற்றை பதிந்து வருகின்றனர். ஏராலமானோர், இதனை ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:


 



 


குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. குட்டி யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வீடியோவில், குட்டி யானை ஒன்று, ஒருவரை பாடாய் படுத்துவதை காணலாம்.  குறிப்பிட்ட அந்த நபருடன் காலை எட்டி உதைத்து வம்பிற்கு இழுக்கிறது விளையாடுகிறது. டிவிட்டரில் பதிவிட்ட இந்த  வீடியோவை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர்.


மேலும் படிக்க |  அந்த நடையழகு... சான்ஸே இல்லை... குடும்பமாக வாக்கிங் போகும் யானைகள்... ரசிக்கும் நெட்டிசன்ஸ்!


யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். ஒரு யானை முழு முதிர்ச்சி அடைய 16 ஆண்டுகள் ஆகும். ஆனால் யானை 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து வளரும். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரையிலான உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. பாலூட்டிகளில் யானைகள் தான் அதிக கர்ப்ப காலத்தைக் கொண்டிருக்கின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் வரை அதாவது இருபத்தி ஒரு மாதம் முதல் இருபத்தி இரண்டு மாதங்கள் வரை. குட்டி யானை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் அதன் தும்பிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட அழகானவை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  ரயில் வரும்போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்து நின்ற யானையின் திக் திக் நிமிட வைரல் வீடியோ


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ