ரயில் வரும்போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்து நின்ற யானையின் திக் திக் நிமிட வைரல் வீடியோ

ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே யானை நடந்து வரும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பைலட் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2023, 11:13 PM IST
  • தண்டவாளத்தின் குறுக்கே யானை
  • முன்பே பார்த்த லோகோ பைலட்
  • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது
ரயில் வரும்போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்து நின்ற யானையின் திக் திக் நிமிட வைரல் வீடியோ title=

பொதுவாக ரயில் பாதையில் கடக்க முயன்றபோது பல விலங்குகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த செய்தியை நாம் அதிகம் கேட்டுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் சில பாதைகள் கட்டுப்பகுதி வழியே செல்வது தான். அந்த செய்திகளுக்கு மாறாக தற்போது இரு ரயில் ஓட்டுநர்களின் துரித செயலால் யானைகள் விபத்தில் சிக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? எப்படி யானையை காப்பாற்றினர்?

மேலும் படிக்க | சுற்றி 4 குரங்குகள், கூலா விளையாடும் குட்டிப்பெண்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியான ஜல்பாய்குரியில் அமைந்துள்ள ரயில் பாதையை நேற்று சில யானைகள் கடந்து சென்றுள்ளன. அப்போது கஞ்சன் கன்யா என்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் அந்த வழியே வந்துள்ளது. சரியாம மாலை 5.45 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்த போது யானைகள் ரயில் தண்டவாளத்தை கடப்பதை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த ரயிலின் ஓட்டுநர்கள் டி துரை மற்றும் குமார் ஆகிய இருவரும் துரிதமாக செயல்பட்டு அவசர அவசரமாக எமெர்ஜென்சி பிரேக்கை அழுத்தியுள்ளனர். 

இதனால் ரயில் சரியான நேரத்தில் யானையின் மேல் மோதாமல் நின்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை அலிபுர்துவார் பகுதியின் ரயில்வே கோட்டத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் எவ்வளவு ஆபத்தாக யானைகள் ரயில் பாதையை கடப்பது பதிவாகியுள்ளது. அத்துடன் ரயிலின் ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரயில் ஓட்டுநர்களின் செயலை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவசரமாக செயல்பட்ட இந்த இரண்டு ஓட்டுநர்களுக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும் என்று பலரும் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

அலிபுர்துவார் பகுதியில் அடிக்கடி சில விலங்குகள் இந்த ரயில் பாதையில் விபத்தில் சிக்கி வருவது வழக்கமாகி வருகிறது. அதிலிருந்து தற்போது இந்த யானைகள் காப்பாற்றப்பட்டுள்ள செய்தி அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | மரத்தின் மேல் விறுவிறுவென்று ஏறி பறவையை பதம் பார்த்த விஷப்பாம்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News