வைரல் வீடியோ: இன்றைய டிரெண்டிங்கான உலகில், பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் சமூக ஊடகத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகி வருகின்றன. இதில் சில பயனுள்ள தகவல்களை நாம் பெறுகிறோம், அதேசமயம் பல கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. மேலும் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அதிலும்  குரங்கு, கரடி, பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு இருக்கிறது. இதில் சிலவை நம்மை ரசிக்க வைக்கிறது, சிலவை கிடுகிடுக்க வைக்கும், மேலும் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. தற்போதும் அப்படி ஒரு வீடியோ தான் இங்கு வைரலாகி வருகின்றது. அந்தவகையில் இது ஒரு நண்டு செய்யும் செயல் பற்றியது. 


பொதுவாக நாம் குரங்கு, கரடி எல்லாம் மனிதர்கள் அணைக்காமல் வீசிச் செல்லும் சிகரெட்டை புடிக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கு நண்டு ஒன்று தம் அடிக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் நண்டு ஒன்று சிகரெட்டை அதன் கொடுக்கில் வைத்து புகைக்கிறது. அதன்பிறகு சிகரெட்டை வாயில் இருந்து எடுத்து புகை விடுகிறது. பின், கேமரா வெளிச்சம் மேலே பட்டதும் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறது அந்த நண்டு. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது இந்தியாவில் எடுக்கப்பட்டது. எந்த ஊர் என்பது தெரியவில்லை.


வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களும் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி ஒரு பயனர், புகைப்பிடிப்பது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆனால் புகைத்தபின் கீழே வீசும் சிகரெட்டை அணைத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம். சில சமயங்களில் இதை விலங்குகளும், கடற்கரையில் வாழும் உயிரினங்களும் உட்கொள்ளும் அபாயம் உள்ளதால் மனிதர்கள் திருந்த வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது oceanlife.4u என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்கது. 


மேலும் படிக்க | Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ