Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி!

தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி!

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 10, 2022, 02:38 PM IST
  • யானைகள் மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம்.
  • இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி! title=

Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி!
சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும், குட்டி யானைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். யானைகள் மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். 

குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்கமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் தூங்கினாலும், குளித்தாலும், சாப்பிட்டாலும் அல்லது விளையாடினாலும் என எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைககள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை நம் மனதை லேசாக்குகின்றன. அந்த வகையில் குட்டி யானை ஒன்று தாய் யானையிடம் பால அருந்தும் அரிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@elephantsofworld)

 

குட்டி யானையை பார்த்தால், அப்போது தான் பிறந்திருப்பது போல் தோன்றுகிறது. மேலும் பால் குடிக்கும் போதே, கேஎமிராவையும் பார்க்கிறது மிகவு வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோ elephantsofworld என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது இது வரை ஆயிரக்கணக்கானோர் வீடியோவை விரும்பி பார்த்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி வந்த இந்த வீடியோ விரைவில் வைரலானது. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News