புதுடெல்லி: ஒன்றிய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான போலி செய்திகள் சமூக ஊடகங்களில் நீண்ட காலமாக பரப்பட்டு வருகின்றன. இந்த போலி வலைத்தளங்கள் பதிவு கட்டணம், விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற மோசடி வேளைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் ஆன்லைன் மூலம் கேட்கப்படுகின்றன. அரசின் திட்டங்களை போன்றே போலி செயலிகளை உருவாக்கி போலி செய்திகளை பரப்பி வருகின்றன. இதனால் பலர் மோசடிக்கு உள்ளாகி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய, மாநில அரசாங்கமும் தொடர்ந்து பொது மக்களை எச்சரித்து வருகிறது. தற்போது ஏழைகள் நல்வாழ்வுக்கான வேலைவாய்ப்பு முகாம் (கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் - Pradhan Mantri Garib Kalyan Yojana) போன்ற போலி வலைத்தளம் சமூக ஊடக தளங்களில் வலம் வருகிறது, இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் இந்த போலி வலைத்தளம் 1,865 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தி உள்ளே நுழையுமாறு கேட்கிறது.


இந்த தவறான தகவல்களை நீக்கிய பத்திரிகை தகவல் அலுவலகம் (Press Information Bureau) பொது மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. 


ALSO READ |  ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு நல்ல செய்தி! PMGKY திட்டம் தீபாவளி வரை நீட்டிப்பு


சமூக ஊடகங்களில் இருக்கும் போலி வலைத்தளம் (Fake Websites) குறித்து உண்மை சோதனை செய்தது. அதில் கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் garibkalyanrojgaar.org என்ற வலைத்தளம் அதிகாரப்பூர்வமானது என்ற செய்தி தவறானது. இது கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்ல என்று PIB உண்மை சோதனை மூலம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 



கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் gkra.nic.in ஆகும். மத்திய அரசாங்கத்தின் வெவ்வேறு திட்டங்கள் தொடர்பான உண்மையான தகவல்களுக்கு உத்தியோகபூர்வ அரசு வலைத்தளங்களை மட்டுமே பார்வையிட வேண்டும் என மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற போலி மற்றும் தவறான செயலி, வலைத்தளம் குறித்து மக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கமும், பல்வேறு நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றனர். 


உண்மை சோதனை (Fact Check)


Garibkalyanrojgaar.org என்ற வலைத்தளம் கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியானின் அதிகாரப்பூர்வ வலைத்தளமாக ஆள்மாறாட்டம் செய்து 1,865 ரூபாயை தேர்வுக் கட்டணமாகக் கேட்கிறது.


இந்த வலைத்தளம் போலியானது மற்றும் கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியானின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்ல. அதிகாரப்பூர்வ வலைத்தளம் gkra.nic.in ஆகும்.



ALSO READ |  கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்க மெகா திட்டம் அறிமுகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR