டேய் இப்ப வாடா...வாடா...வாடா, வந்து தொட்டுப் பார்ற என்கிற வடிவேலு ஸ்டைலில் பெண் ஒருவர் புலியிடம் தன் வீரத்தை காட்டியிருக்கிறார். என்ன புலியிடம் வீரத்தை காட்டிவிட்டாரா? என பெருமகிழ்ச்சி எல்லாம் அடைந்து கற்பனை உலகுக்கு சென்றுவிட வேண்ணடாம். அவர் கூண்டுக்குள் அடைத்த புலியிடம் தான் தன்னுடைய குசும்பு தனத்தை காட்டியிருக்கிறார். கண்ணாடி மட்டும் இல்லை என்றால் அவருடைய நிலைமை என்னவாகியிருக்கும் என்பது அந்த வீடியோவை பார்க்கும் ஒரு சில விநாடிகளிலேயே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: மீனா இல்லை ராட்சஸனா... பாம்பு, கருந்தேள், பூரான்களை கபளீகரம் செய்யும் மீன்!


ஆம், ஒரு பார்க் ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக கண்ணாடியை பாதுகாப்பாக அமைத்து அதன் வழியே பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், அங்கு சென்ற இந்த குசும்புக்கார பெண், வெள்ளைப் புலியை பார்த்ததும் தான் என்னவோ பலசாலி போல் கற்பனை செய்து கொண்டு புலியை கடுபேற்றுகிறார். அதாவது, அந்த புலியை பார்த்து நக்கலாக நடனமாடுகிறார். குதித்து குதித்து கடுப்பேற்றுகிறார். இதனைப் பார்த்த புலி சற்று கடுப்பானாலும், எனக்கு முன்னால வேலி இருக்கிறதே... அதை எடுத்துவிட்டுட்டு உன்னுடைய குசும்பை காட்டினால் நன்றாக இருக்கும் எனும் மைண்ட் வாய்ஸை அதனுடைய ரியாக்ஷனில் அறிந்து கொள்ள முடிகிறது.



இப்போது இந்த வீடியோ டிவிட்டரில் பதிவிட்டப்பட்டு வைரலாகியிருக்கிறது. வீடியோவை பார்த்து சிரிக்கும் நெட்டிசன்களும் புலியின் மைண்ட் வாய்ஸை சரியாக கேட்ச் செய்துள்ளனர். அவர்களும் கண்ணாடி மட்டும் இல்லை என்றால் அந்த பெண்ணின் நிலை...! என எண்ணி தங்களின் சிரிப்பை சிமிலியாக பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெரிய பாம்பா..கிடுகிடுன்னு ஏறுது பாருங்க: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ