‘ஏம்மா அந்த பக்கமா போம்மா’.... எருமையை கடுப்பேற்றிய பெண்ணின் டான்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: ஒரு சிறுமி ஆடும் நடனத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. எருமைக்கு தீவனம் கொடுத்துக்கொண்டு இருக்கும் அவர் தொடீரென நடனமாடத் தொடங்குகிறார்.
வைரல் வீடியோ: சமூக ஊடக உலகில் நாம் பல விதமான வீடியோக்களை காண்கிறோம். சிரிக்க வைக்கும் காட்சிகளுக்கும், வியக்க வைக்கும் காட்சிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. சமீபத்திலும் அப்படி ஓரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதை கண்டால் கண்டிப்பாக உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒரு சிறுமி ஆடும் நடனத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. எருமைக்கு தீவனம் கொடுத்துக்கொண்டு இருக்கும் அவர் தொடீரென நடனமாடத் தொடங்குகிறார். ஆனால், அதற்கான விளைவையும் உடனே சந்திக்கிறார். அவரது நடனத்தை பார்த்து எருமையே கடுப்பாகி விடுகிறது.
சிறுமியின் நடனத்தை நிறுத்துவதிலேயே அது குறியாக இருக்கின்றது. அந்த நோக்குடன் எருமை சிறுமியின் அருகில் செல்கிறது. இதைக் கண்ட சிறுமி பயந்து அங்கிருந்து ஓடியே விடுகிறார். அங்கு அமர்ந்துள்ள அனைவரும் இந்த காட்சியை கண்டு ஜோராக சிரிக்கிறார்கள்.
ஷாக்குடன் சிரிப்பையும் வரவழைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Rahul Sain என்ற பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு அதிகமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்
இந்த வீடியோவைப் பார்க்கும்போது, அந்தப் பெண் ஒரு அசாதாரண உடை அணிந்து நடனமாடுவதை காண முடிகின்றது. புல்லால் ஆன ஆடையை அணிந்துகொண்டு எருமைக்கு உணவளிக்க சென்ற பெண் அங்கேயே டான்ஸ் ஆடத் தொடங்குகிறாள். புல்லை கண்ட எருமை அதை சாப்பிட வருகிறது. எருமை அருகில் வருவதைப் பார்த்த சிறுமி பயந்து ஓட ஆரம்பித்தாள். அவரது நிலையை பார்த்து குடும்பத்தினர் சத்தம் போட்டு சிரித்தனர்.
சமூக ஊடகங்கள்
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சுவாரசியமான வீடியோவைத்தான் இந்த பதிவில் பார்த்தோம்.
மேலும் படிக்க | “என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ