“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ..

Viral Video Of A Lion :  காட்டிற்கே ராஜாவாக இருக்கும் சிங்கம், தனது சகாக்களுடன் இருக்கும் போது ஓவராக சேட்டை செய்யும். அது குறித்த வீடியோ ஒன்றை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Sep 11, 2024, 06:37 PM IST
  • சேட்டை செய்யும் சிங்கம்!
  • இவற்றின் குணாதிசயம் என்ன?
  • குழந்தை போல மாறிய காட்டு ராஜா-வைரல் வீடியோ!!
“என் மூஞ்சு மேலதான் உக்காருவியா?” சிங்கம் செய்யும் குறும்பு சேட்டை! வைரல் வீடியோ.. title=

Viral Video Of A Lion : கம்பீரமான, கட்டுமஸ்தான, கட்டுக்கடங்காத காட்டு விலங்குகளுள் ஒன்று, சிங்கம். மனிதர்களில், வலிமை மிகுந்தவராக, சக்தி வாய்ந்த இடத்தில் இருப்பவர்களை "சிங்கம் மாதிரி அவரு..” என்று கூறுவதை கேட்டிருப்போம். இப்படி, கெத்தான காட்டு விலங்காக வளம் வரும் சிங்கம், பல சமயங்களில் குறும்பான மிருகமாக மாறி விடும். 

வைரல் வீடியோ:

வைரலாகி வரும் வீடியோவில், மூன்று சிங்கங்கள் காண்பிக்கப்படுகிறது. அடர்த்தியான சிகை வைத்திருக்கும் அந்த மூன்று சிங்கங்களில், 2 சிங்கங்கள் உறங்கி கொண்டிருக்கின்றன. இடையில் வரும் ஒரு சிங்கம், இன்னொரு சிங்கத்தின் அருகில் சென்று அமருகிறது. இதனால் கடுப்பாகும் சிங்கம், உறங்கி கொண்டிருக்கும் இன்னொரு சிங்கத்தின் இடத்தில் சென்று படுத்துக்கொள்கிறது. இதில் எழுந்து கொள்ளும் அந்த சிங்கம், சிறிது நேரம் அங்குமிங்கும் பார்த்து விட்டு, தன்னை எழுப்பிவிட்டு படுத்த சிங்கத்தின் முகத்தின் மேல் அமர்ந்து கொள்கிறது. பின்னர் அதுவே என்ன நினைத்ததே தெரியவில்லை. வேறு இடத்தில் சென்று படுத்துக்கொண்டது. 

எப்போதும் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு, தைரியமாக சுற்றும் சிங்கங்கள், குழந்தைகள் போல் நடந்து கொள்வது பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சே... என்ன கொடுமை சார்... காதலியை கவர நடனமாடும் ஆண் மயில்... அலட்சியம் செய்யும் பெண் மயில்

சிங்களின் குணாதிசயம்:

>தைரியம்: சிங்கங்கள் பயமற்ற விலங்குகளாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் இதனை காட்டு ராஜா என்று பலர் அழைக்கின்றனர். 

>பெரிய உடல்: சிங்கங்களுக்கு, இயற்கையாகவே பெரிய-கட்டுமஸ்தான உடல் இருக்கும். இது, ஆளுமை திறனை காண்பிக்கும் வகையில் இருக்கும். இதனால், அனைத்து மிருகங்களும் இதை பார்த்தால் பயந்து நடுங்கும். 

>தலைமைத்துவம்: யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே, பிறரை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்தவையாக இருக்குமாம், சிங்கங்கள். 

>சமூகம்: சிங்கங்களும் மனிதர்களை போல சமூக மிருகமாக விளங்குமாம். இவை, பெரிய கூட்டத்துடன் வாழ விரும்புமாம். அது மட்டுமன்றி, ஒரே குடும்பத்தை சேர்ந்த சிங்கங்கள், தன்னை சார்ந்தவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாம், பாசமும் காட்டுமாம். 

>வேட்டையாடும் தன்மை: சிங்கங்களுக்கு எந்த மிருகத்தை எப்படி வேட்டையாட வேண்டும் என சிறப்பாக கணக்கு போட தெரியும். 

>ஆதிக்கம்: சிங்கங்கள், தன் இணைகள் மட்டுமன்றி பிற மிருகங்களை கையாள்வதிலும் ஆதிக்கம் செலுத்துமாம். 

மேலும் படிக்க | தலையில் கேமரா.... வேற லெவல் வைரல் வீடியோ: சிசிடிவி கண்டுபித்தவனையே மிரள வைத்த சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News