காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல்
சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், காதலியை இம்ப்ரஸ் செய்ய காதலன் பிஞ்சு போன ஷூவை எவ்வாறு சரிசெய்யத் தொடங்குகிறான் என்பதைக் காணலாம்.
காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வெகுவாக வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் போன்றவற்றை இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் இதில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பொதுவாக காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட மிகவும் வித்தியாசமானது. அதன்படி இந்த வீடியோ காதலன் மற்றும் காதலியுடன் தொடர்புடையது போல் தெரிகிறது.
அதன்படி இங்கு ஒரு பையனும் மற்றும் சில பெண்களும் காணப்படுகிறார்கள். அந்த பையன் அதில் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய அவரது பிஞ்சு போன ஷூவை சரிசெய்வதைக் காணமுடிகிறது. இருவரின் செய்கைகளைப் பார்க்கும்போது இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பது போல் தெரிகிறது. அதன்படி பள்ளி சிறுவர்கள் தொடர்பான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ
காலணிகளை சரிசெய்யும் காதலன்
சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், பள்ளியில் படிக்கும் மாணவன் எப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும் சிறுமியின் காலணிகளை கையில் ஏந்தியபடி அமர்ந்து கடுமையாக உழைத்து சரி செய்வதையும் நீங்கள் காணலாம். அதே சமயம் பக்கத்தில் இருந்த பெண் அவரது தோளில் கை வைத்து தனது தோழிகளுடன் பேசுவதையும் இந்த வீடியோ மூலம் நீங்கள் காணலாம். மறுபுறம், பையனைப் பார்த்தால், அவர் எல்லாவற்றையும் மறந்து, காதலியின் காலணிகளை சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
காதலியின் காலணிகளை சரிசெய்யும் காதலனின் வீடியோவை இங்கே காண்க:
இந்த வைரலான வீடியோவை பார்த்துவிட்டு, சமூக வலைதளவாசிகள் வழக்கம் போல் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ @videonation.teb என்கிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ