மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

Snake Viral Video: பயங்கரமான மலைப்பாம்புகள் புடை சூழ ஒரு சிறுமி கவலை இல்லாமல், பயம் இல்லாமம் ஒய்யாரமாய் அமர்ந்து அவற்றுடன் விளையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2022, 06:21 PM IST
  • பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள்.
  • ஆனால், இவற்றை சர்வ சாதாரணமாக கையாளும் பலரையும் நாம் இணையத்தில் கண்டு வியந்துள்ளோம்.
  • பாம்புகளை கொஞ்சி, உணவளித்து, தண்ணீர் கொடுத்து, விளையாடி மகிழும் பலரது வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்துள்ளன.
மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ title=

பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகம் பல வித வீடியோக்களால் நிறைந்துள்ளது. இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

பெரும்பாலும் பாம்புகளை கண்டாலே அனைவரும் அஞ்சி ஓடத்தான் செய்வார்கள். ஆனால், இவற்றை சர்வ சாதாரணமாக கையாளும் பலரையும் நாம் இணையத்தில் கண்டு வியந்துள்ளோம். பாம்புகளை கொஞ்சி, உணவளித்து, தண்ணீர் கொடுத்து, விளையாடி மகிழும் பலரது வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்துள்ளன. ஆனால், இந்த அசாத்திய துணிச்சல் சிறு வயதினருக்கு இருப்பது மிக அரிது. அப்படிப்பட்ட ஒரு அசாத்திய துணிச்சல் கொண்ட ஒரு சிறுமியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

விசாலமான மலைப்பாம்புகளின் வீடியோ இது. இது காண்பவர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஒரு சிறுமி ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது அங்கு பல அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு அவருக்கு அருகில் வருகிறது. ஆனால், அந்த பாம்பை பார்த்து அந்த சிறுமி கொஞ்சமும் அச்சப்படவில்லை. 

மேலும் படிக்க | காதலா, ஊடலா, கொஞ்சலா, கெஞ்சலா? இணையத்தை குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ 

அருகில் வந்த ராட்சத மலைப்பாம்பு 

வீடியோவில் நாம் காணும் காட்சி நம்மை வியக்க வைக்கிறது. சிறுமியின் பின்னால், அருகில் ஒரு பாம்பு வந்த உடனேயே இன்னும் இரண்டு பெரிய மலைப்பாம்புகளும் சிறுமியின் அருகில் வருகின்றன. சுமார் இருபது அடி நீளமும், அதிக எடையும் கொண்ட மலைப்பாம்புகள் நேரடியாக சிறுமியிடம் வருகின்றன. ஆனால், அந்த பாம்புகள் அந்த சிறுமிக்கும் எந்த தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக, சிறுமி அந்த பாம்புகளுடன் விளையாடத் தொடங்குகிறார். 

அசால்டாய் மலைப்பாம்புகளுடன் விளையாடும் சிறுமியின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோவில், சிறுமி மலைப்பாம்பின் வாயைப் பிடித்தபடி அதை அரவணைத்து பாசம் காட்டுவதை காண முடிகின்றது. சிறுமியின் அருகில் இருக்கும் மூன்று பாம்புகளும் அவருடன் பாசம் காட்டுவதை பார்த்தால், அவை சிறுமியின் நண்பர்கள் போலத் தோன்றுகிறது. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ snake._.world என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | கொஞ்சம் அழகா இருந்தா இப்டிதான் ஃபாலோ பண்ணுவானுங்களோ... பூனையின் க்யூட் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News