என்னடா இது..ஓடும் ரயிலில் இப்படியா ஆடுவாங்க..கடுப்பேத்தும் வைரல் வீடியோ
Viral Video: ரயிலில் சில பெண்கள் டிரெண்டிங் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல வித வினோதமான வீடியோக்கள் பகிரப்படுவதுண்டு. இவற்றை பார்த்தால் நம்மால் நம் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு வீடியோ தற்போதும் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்க்கும் பயனர்களுக்கும் சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்ற குழப்பமே ஏற்பட்டு விடுகின்றது. இந்த வீடியோவில் சில பெண்கள் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
'ரீல்ஸ் மேனியா' இளைஞர்களை பைத்தியமாக்கி வருகிறது. பிரபலமான பாடல்கள் அல்லது உரையாடல்களில் நடனமாடுவது அல்லது நடிப்பது, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வது இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி விட்டது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோவில் முதலில் ஒரு பெண் ரயிலின் ஸைட் பர்த்தில் கவர்ச்சியாக நடனம் ஆடத் தொடங்குகிறார். கேமரா பின்னர் அதே நடைபாதையில் நிற்கும் மற்றொரு பெண்ணை நோக்கி நகர்கிறது, பின்னர் அதே பக்கத்தில் மேல் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் நடத்தை வீடியோவில் பதிவு செய்யப் படுகிறது. வீடியோவின் கடைசி பகுதியில், சில பெண்கள் அதே நடைபாதையில் அமர்ந்து டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடுவது போல் காட்டப்பட்டுள்ளது.
ரயிலில் பெண்களின் நடன வீடியோவை இங்கே காணுங்கள்
இந்த வீடியோ சுமார் 10 நிமிடம் தான் இருக்கும். மேலும் இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், வீடியோவைப் பார்த்து, மக்கள் அதிர்ச்சியடைந்தனர், கூடவே அவர்களால் சிரிப்பையும் அடக்க முடியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. வீடியோவைப் பார்த்து இணையவாசிகள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பெண்கள் ஆடியுள்ள பாடல் "கிசி கோ குஷி கா ஷௌக் ஹோ தோ" படலாகும், மேலும் இந்த பாடல் பழைய பாலிவுட் படத்தின் பாடல் போல் தெரிகிறது, ஆனால் இந்த பாடலை தற்போது வீடியோ எடுப்பதற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பாம்பு கொட்டாவி விடுவதை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்கள்....மிக அரிய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ