வளைகரடியின் அசாத்திய துணிச்சல்
காட்டு விலங்கான சிறுத்தையிடம் தப்பிப்பது என்பதெல்லாம் இயலாத ஒன்று என சொல்வதை தான் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், அத்தகைய சிறுத்தையை எதிர்த்து சண்டை செய்யக்கூடிய விலங்கு தேன் வளைகரடி. எதற்கும் பயப்படாத அந்த விலங்கு, அண்மையில் ஒரே நேரத்தில் மூன்று சிறுத்தைகளை அலறவிட்டிருக்கிறது. வேட்டையாட வந்த சிறுத்தைகளை தைரியத்தை ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தி, கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் சண்டை செய்திருக்கிறது அந்த விலங்கு. இதனால் பயந்தபோன 3 சிறுத்தைகளும் அதனை வேட்டையாடுவதை விட்டுவிட்டு திரும்பி சென்றன.
மேலும் படிக்க | டெஸ்லா காரில் தெரிந்த பேய்... அரண்டுபோன பயணிகள்: வைரல் வீடியோ
சிங்கங்களே தள்ளி நிற்கும்
(@Figensport) May 3, 2023
டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ காண்போரை வியக்க வைக்கிறது. இது எப்படி சாத்தியம் என தேடிப் பார்க்கும்போது வளைகரடியை பற்றி பல வியத்தகு தகவல்கள் கிடைக்கின்றன. தேன் வளைக்கரடிகள் மண்ணுக்குள் குகை தோண்டி அதற்குள் வாழ்கிற உயிரினம். ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கீரி வகையைச் சேர்ந்த சிற்றினம். மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. அதிகபட்சமாக 24 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. இதன் இனப்பெருக்க காலம் ஆறு மாதங்கள். ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். தேன் வளைக்கரடிகளின் குட்டிகள் சர்வைவல் பற்றி கற்றுக் கொள்ள தாயுடன் பயணிக்கின்றன. தேன் வளைக்கரடிகள் தங்களின் குட்டிகளை இரண்டு வருடங்கள் வரை உடனிருந்து வளர்க்கும்.
பாம்புகள் கூட நடுங்கும்
எப்படி எதிரிகளை எதிர்கொள்வது, அவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சகலத்தையும் கற்றுக் கொடுத்தபிறகே குட்டிகளைத் தனியாகச் செல்ல விடும். யாரைக் கண்டும் பயப்படாத, உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒரே விலங்கு தேன் வளைக்கரடி (HONEY BADGER ). விலங்குகளின் ஸோம்பி உயிரினம் என்று கூட சொல்லலாம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். எதிரில் இருப்பது மானாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். அதன் இயல்பே எதிர்த்து நிற்பதுதான். பசித்தால் பக்கத்தில் இருப்பது நாகப் பாம்பாக இருந்தாலும் ஒரே கடியில் கடித்துக் கொன்று விட்டுத் தூங்கி விடும். 30 நிமிடங்கள் கழித்து எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னுடைய குகைக்குள் சென்றுவிடும்.
வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்
உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளான நாகப் பாம்பு, கறுப்பு மாம்பா என எந்தப் பாம்பாக இருந்தாலும் இதற்கு முன்பாக இரண்டு நிமிடங்கள்தாம். அந்த இரண்டு நிமிடத்தில் தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள்ளலாம் இல்லையென்றால் டின்னரோ, பிரேக்ஃபாஸ்ட்டாகவோ மாறிவிடும். எவ்வளவு விஷத்தைக் கக்கினாலும் இரண்டாவது நிமிடத்தின் இறுதியில் சரியாகப் பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துவிடும். ஆராய்ச்சியாளர்கள் பலரும் எப்படி இது சாத்தியம் என இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாகக் காணப்படுகிறது.
மேலும் படிக்க | தவறான திசையில் போய் கார் மீது மோதிய நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு: வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ