புது தில்லி: வகுப்பறையில் தூங்கும் ஒரு மாணவியை, வகுப்பு ஆசிரியர் எழுப்புகிறார். ஆனால் அந்த சிறுமி எனக்கு தூக்கம் தான் முக்கியம் என கூறுவது போல, அந்த சிறுமியின் நடவடிக்கை பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஒவ்வொருவரும் கட்டாயம் வகுப்பறையில் தூங்கி இருப்பீர்கள் என்பது நிச்சியம். இந்த சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த சிறுமியின் பெயர் மன்சீ, அவளை வகுப்பு ஆசிரியரும், சக மாணவியும் அழைக்கும்போது, அவள் சலிப்பை வெளிப்படுத்துகிறாள். பல முறை அழைத்ததும், அவள் எழுந்து பார்க்கிறாள், மீண்டும் தனது தலையை சாய்த்து தூங்குகிறாள். இப்படி மூன்று முறை மாறி மாறி செய்கிறாள். இதை அவரது ஆசிரியர் கேமராவில் பதிவு செய்துள்ளார். 


இந்த வீடியோவில் இந்த குழந்தை எவ்வளவு அழகாக தூக்கத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள் என்பதை பாருங்கள்.