விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! டிக்கெட்களுக்கு 12% அதிரடி தள்ளுபடி!
வெள்ளி விழா வாரத்தைக் கொண்டாடும் வகையில், IRCTC தனது தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 12 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு மக்களுக்கு உதவும் IRCTC, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வெள்ளி விழாவை கொண்ட உள்ளது. 27 செப்டம்பர் 1999ல் உருவாக்கப்பட்ட இந்த சேவை உணவு வழங்குதல், விருந்தோம்பல், சுற்றுலா சேவை, இந்திய ரயில்வே ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இதனை சிறப்பாக மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாட உள்ளது. இந்த வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், இண்டிகோ விமானங்களுக்கான டிக்கெட்டுகளில் 12 சதவீதம் தள்ளுபடி வழங்கி உள்ளன. இந்த விற்பனை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது, எனவே அனைவரும் தங்கள் விமானங்களை முன்பதிவு செய்யும் போது சிறிது பணத்தை சேமிக்க முடியும்!
மேலும் படிக்க | நாகப்பாம்பை மாலையாய் போட்ட குரங்கு: ஷாக் ஆன மற்றொரு பாம்பு... வேற லெவல் வைரல் வீடியோ
3 நாட்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை!
வணிகத்தில் ஈடுபட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், IRCTC மக்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கும் விதத்தில், செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 வரை இண்டிகோவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முன்பதிவுகளில் முன்பதிவு செய்தால் 12% தள்ளுபடி பெறலாம். அக்டோபர் 3, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை செல்லும் விமானங்களை முன்பதிவு செய்ய இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். இந்த சலுகைஎங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் முடிந்ததை திரும்பக் கொடுப்பதற்கும் சிலருக்கு விமான பயணக் கனவுகளை நனவாக்கும் வழியாகும் என்று IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சலுகை பற்றிய விவரங்கள்
இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இண்டிகோ விமானங்களில் 12% வரை சேமிக்கலாம். இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 வரை மட்டுமே கிடைக்கும். அக்டோபர் 3, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை எப்போது வேண்டுமானாலும் உங்கள் விமானத்தை முன்பதிவு செய்யலாம். ஆனால் நீங்கள் பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது உங்கள் விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் டிக்கெட்டுகளைப் பெற, IRCTC இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது அவர்களின் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ