இந்தாண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 ஸ்மார்ட் போன்கள்!
இந்தாண்டு குறைந்தளவு எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போன்களே வெளியாகியன. விலை குறைந்தது முதல் விலை உயர்ந்த போன்கள் என ஒவ்வொருவருக்கும் அவரது பட்ஜட்டுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் போன்கள் வெளியாகின.
இந்தாண்டு குறைந்தளவு எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போன்களே வெளியாகியன. விலை குறைந்தது முதல் விலை உயர்ந்த போன்கள் என ஒவ்வொருவருக்கும் அவரது பட்ஜட்டுக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் போன்கள் வெளியாகின.
எனினும் இவற்றில் வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என எடுத்துக்கொண்டால் Realme மற்றும் Redmi ஸ்மார்ட்போன்கள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒரு தொலைபேசியை அறிமுகம் செய்யும்போது எல்லாம், அவர்களின் சமூக ஊடக தளங்களும் பயனர்ளுக்கு பெரிதும் பரிட்சையமாகிறது. இதன் காரணமாகவே இணையத்தில் ஒரு குறித்த தொலைப்பேசியினை (அ) ஸ்மார்ட்போனின் பெயர் பெரிதும் அடிப்படுகிறது. குறிப்பிட்டு கூறினால் தலைப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது சுயாதீன விளம்பரத்திற்காக தங்களது சமூக ஊடக கணக்குகளை பெருமளவில் பயன்படுத்துகின்றனர் எனலாம். இதன் மூலம் பயனர்களின் தேடல்களும் கனிசமாக அதிகரிக்கிறது எனலாம்.
சரியான சொற்களைக் கொண்டு இந்த தேடல்களின் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தொலைபேசி ‘trends’ - ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் trend-களைக் கட்டுப்படுத்துகின்றன.
அந்த வகையில் கூகிள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பெரும்பான்மை இடத்தை Realme மற்றும் Redmi ஸ்மார்ட்போன்கள் பிடித்துள்ளன.
இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பிரபலமான 10 தொலைபேசிகள் இங்கே:
Redmi Note 7 Pro
Samsung M20
Vivo S1
Redmi Note 8 Pro
Redmi Note 7
iPhone 11
OnePlus 7
Realme 3 Pro
Realme 5
Vivo Z1 Pro
Xiaomi-யின் Redmi இப்பட்டியலில் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. Realme மற்றும் Vivo இரண்டு இடங்களுடன் அடுத்த இடங்களை பிடித்துள்ளது. மற்ற 3 இடங்களை ஆப்பிள், ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் தலா ஒன்று என பகிர்ந்துக்கொண்டன. அதே வேலையில் Oppo, Huawei மற்றும் Nokia போன்றவை பட்டியலில் இடம் பெறவில்லை, ஆனால் இந்த பிராண்டுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஈர்க்கக்கூடிய படைப்புகளை சந்தையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.