கூகிள் போட்டோஸ் இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்றாகும். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிள் போட்டோஸ் (Google Photos) தளத்தில் வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது.  ஆம், கூகிள் போட்டோஸ் தளத்தில் நீங்கள் வரம்பற்ற அளவில் இலவசமாக உங்கள் புகைப்படங்களை சேமிக்கலாம் என்ற சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது.


2021  ஜூன் 1ம் தேதி,க்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய  உயர் தரத்திலலான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள்,  15 ஜிபி கூகிள் (Google) கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. 


கடந்த ஆண்டு நவம்பரில், கூகிள் 2021 ஜூன் 1 முதல் கூகிள் போட்டோஸ் தளத்தில்  'உயர் தரமான' புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலௌகை நிறுத்தப்படும்  என்று அறிவித்தது.


ஜூன் 1, 2021 க்குப் பிறகு, நிறுவனம் கூகிள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே சேமிக்க வேண்டு, அதற்கு மேல் என்றால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


ALSO READ | அசத்தலான Apple iPad Pro, இப்போது இந்தியாவில், சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விபரம்


இருப்பினும், உலகளவிலான பிக்சல் (Pixel ) பயனர்களுக்கு இது பொருந்தாது என கூகிள் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பிக்சல் சாதனம் வைத்திருந்தால், Google போட்டோஸில் வரம்பற்ற வகையில்  இலவச உயர்தர புகைப்படங்களை சேமிக்கலாம்.


ஜூன் 1, 2021 முதல், உயர்தர உள்ளடக்கம் சேமிக்கப்படும். ஆனால் உங்கள் Google போட்டோஸ் அதன் சேமிப்பிடத்தை கணக்கிடும்.


மேலும், உங்கள் சேமிப்பக வரம்பை அடைந்ததும், கூடுதலாக புகைப்படங்களை சேமிக்க வேண்டும் என்றால், நீங்கள் Google One  என்பதற்கான சந்தாவை செலுத்தி இணையலாம்.  புகைப்படங்களில் இலவச சேமிப்பக ஆப்ஷனை தொடர, சில தேவையற்ற உள்ளடக்கத்தை நீக்கலாம்.


 


தற்போதுள்ள கூகிள் புகைப்படங்கள் பயனர்கள் தங்களது எல்லா படங்களையும் வீடியோக்களையும் இப்போதே உயர் தரத்தில் பதிவேற்ற வேண்டும்.


கூகிள் போட்டோஸ், 16 மெகாபிக்சல்கள் வரை புகைப்படங்களையும் 1080p ரெசல்யூஷன் வரை உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை சேமிக்க அனுமதிக்கிறது.


ALSO READ | மோட்டார் வாகன விதிகளில் மாற்றம்; இனி வாகனத்திற்கும் வாரிசு தேர்வு 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR