Lion Video Viral :  நம் கைக்குள் அடங்கிவிட்ட மொபைல் நம்மோடு பின்னிப் பிணைந்து விட்டது என்றால், அதில் நாம் பார்க்கும் விஷயங்கள், நமது சிறிய உலகத்தை விஸ்தாரமாக்கிவிட்டன. இன்று இணையம், செல்போன், ஸ்மார்ட்போன் இல்லாத உலகையே கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை என்பதுபோலவே, வீடியோவை பார்க்காத நாளும் இல்லை என்று சொல்லிவிடலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கின்றன என்றால், அதற்கு காரணமான சமூக ஊடகங்கள், நமது வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்தி இயல்பாக்குகிறது. அதிலும் வைரலாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகம். 


இணையவாசிகள் விரும்பி பார்க்கும் வீடியோக்களில் குரங்கும், பாம்பு, சிங்கம், புலி, யானை என காட்டு விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் இருந்தால், அந்த வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அப்படியோரு வீடியோ தான் இது. ஆச்சரியம் அளித்து சிந்திக்கவும் வைக்கும் வைரல் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் வைரலாகிறது. வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிக்கலாம்.



வீடியோவின் துவக்கத்தில், ஒரு சிங்கம் நீர்நிலையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அமைதியாக நீர் அருந்திக் கொண்டிருக்கும் சிங்கத்தின் பக்கத்தில் வரும் ஆமை, சிங்கத்தின் வலிமை தெரியாமல் பக்கத்தில் சென்று வாலாட்டுகிறது.


அடேய்! இத்துணூண்டு இருந்துகிட்டு என்ன வேலை பண்ற? என சிங்கம் ஜாலி மூடில் கேள்வி கேட்பது போல தோன்றினாலும், சிங்கத்தின் பொறுமை அசாத்தியமானது. மிகப் பெரிய கொடூரமான விலங்கும், தன்னை சீண்டும், பக்கத்தில் வரும் குட்டி ஆமையை போனால் போகுது என்று விட்டு விட்டு தண்ணீர் குடிக்கும் டியூட்டியை தொடர்வது ஆச்சரியமாகவே இருக்கிறது.


இரண்டுக்கும் இடையில் அப்படி என்ன கனெக்‌ஷன் என்று யோசித்தால், ஒரு பெரிய தொடர்பும் இல்லை, சிங்கத்துக்கு பசிக்கல போல என்று சொல்லத் தோன்றுகிறது. அதேபோல, பசியில்லாமல் இருந்தாலும் ஆமையை கண்டுக் கொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால், இதேபோன்ற அதிர்ஷ்டமான சந்தர்ப்பம் யாருக்கும் எப்போதும் கிடைத்துவிடுமா? வைரலாகும் சிங்கத்தின் தண்ணி வீடியோ வைரலாகிறது. 


பொதுவாக நாம் பார்த்துவிடவே முடியாத பல நிகழ்வுகளை இணையத்தில் வீடியோக்களாக பார்த்து ரசிக்கலாம். பலருக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பகிரப்பட்டு அது வைரலாகிறது. வைரலாகும் எல்லா வீடியோக்களுக்கும் உண்மையாவையா என்றால் அது கேள்விக்குறி தான். அதே சந்தேகம் இங்கும் வருகிறது.


மேலும் படிக்க | Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ