80-வயது கலிப்போர்னியா தாத்தாவின் Love Proposal வீடியோ!
சாண்டியா பீக் டிராமினை சேர்ந்த காதல் ஜோடியின் Proposal வீடியோவினை பதிவுசெய்ய முயற்சித்த முதியவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!
சாண்டியா பீக் டிராமினை சேர்ந்த காதல் ஜோடியின் Proposal வீடியோவினை பதிவுசெய்ய முயற்சித்த முதியவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!
சாண்டியா பீக் டிராமினை சேர்ந்த காதல் ஜோடி ஜெய்ம் ஹார்ட் மற்றும் ஜெய்ஸ் ஃப்ளாடிங். ஜெய்ம் ஹார்ட் தனது காதலி ஜெய்ஸ் ஃப்ளாடிங்-யிடம் தனது காதலை தெரிவிக்க தனியொரு இடத்தினை தேர்ந்தெடுத்தார். அதே வேலையில் இந்த தருணத்தை நினைவு சின்னமாக மாற்ற தன் நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார்.
இந்த நண்பர்கள் கூட்டத்தில் ஜெய்மியின் தாத்தா ஜான் ஹார்ட்-ம் பங்கேற்றார். அத்தோடு மட்டும் அல்லாமல் காதல் ஜோடிகள் ஒருவருகொருவர் தங்கள் காதலை பகிர்ந்துக்கொண்ட தருணத்தை வீடியோவாக படம் பிடித்தார். ஆனால் எதிர்பாரா விதமாக ஜெய்மின் தாத்தா காதல் ஜோடிகளை படம் பிடிப்பதற்கு பதிலாக தன்னையே படம் பிடித்துக்கொண்டார்.
இந்த வீடியோவானது அவரது அறியாமையினை காட்டுவது மட்டும் அல்லாமல், வேடிக்கையாகவும் உள்ளது. வீடியோவிற்கு இடையில் அவர் "நான் இதைக் கையாள முடியும் என்று நினைத்தேன், ஆனால் எப்படி கையாளுவது என தெரிவில்லை, இருப்பினும் நான் உங்களை படம் பிடித்துக்கொண்டு தான் இருக்கின்றேன்" என கூறி தனது அறியாமையினை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவின் முழு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது...