`ஆரம்பமே இப்படியா?` சொதப்பிய மணமகன், கடுப்பான மணமகள்: வைரல் வீடியோ
Funny Wedding Video: என்னய்யா நடக்குது இங்க? இப்படி கூட நடக்குமா? என வியக்க வைக்கும் ஒரு வீடிபொ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.
இணையத்தில் வெளிவரும் திருமண வீடியோக்களில் பல்வேறு திருமண சடங்குகளின் வீடியோக்களை நாம் காண்கிறோம். இந்த வீடியோக்களில் நாம் பல்வேறு வகையான காட்சிகளைப் பார்க்கிறோம். மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையில் மேடையில் நடக்கும் வேடிக்கையான சம்பவன்கள், சண்டைகள், கேளிக்கைகள், கேலி விளையாட்டுகள், பாச பரிமாற்றங்கள் என பல விஷயங்கள் இவற்றில் காணக்கிடைக்கின்றன.
மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ
தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு நடப்பதை காண முடிகின்றது. மணமகனும், மணமகளும் தங்களுக்குள் மாலை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதை காண்கிறோம். மணமகள் மணமகனின் கழுத்தில் மாலை போடுகிறார். அதன் பிறகு மணமகன் மாலை போடுகிறார். ஆனால், அங்கு தான் பிரச்சனை எழுகிறது. மணமகனால் சரியாக மாலை போட முடியவில்லை!! உண்மைதான்!! மணமகள் கழுத்தில் மாலை போடுவதற்குள் மணமகன் திண்டாடிப்போகிறார்.
கேலிக்கூத்தான மணமகனின் செயல்
மாலை மாற்றும் சடங்கிற்கு மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் மேடைக்கு வருவதை சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் காண முடிகிறது. முதலில் மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் மணமகனின் முறை வருகிறது. ஆனால் அவர் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிக்க முயன்று, அதில் தோல்வியையே காண்கிறார். சில சமயங்களில் மிக எளிய செயல்களை நம்மால் செய்ய முடியாமல் போவதுண்டு. இப்படி அனைவருக்கும் நடப்பது இயல்புதான். ஆனால், அன்று மணமகனுக்கு மாலை சரியாக போட முடியாமல் போன சம்பவம் அவருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த சம்பவம் மேடையில் நடக்கிறது. திருமண மண்டபத்தில் இதை ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பலமுறை முயன்றும் மணமகனால் மாலை அணிவிப்பதில் வெற்றிபெற முடியவில்லை. இதனால் விருந்தினர்கள் முன் நகைப்புக்குரியவராக மாறிப்போகிறார் மணமகன்.
விருந்தினரால் நம்ப முடியவில்லை
மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் மாலை அணிவிக்க பலமுறை முயன்றும் தோல்வியடைந்த விதத்தை விருந்தினரால் கூட நம்ப முடியவில்லை. இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
ஒரு பயனர், 'அண்ணா, கல்யாணம் வேண்டாம், வேண்டாம்' என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், 'எங்கயோ சாராயம் அடிச்சிட்டு வந்திருக்காரு.... அதான் எஃபெக்ட் இருக்கு' என எழுதியுள்ளார். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க | மனைவியின் ஓவர் பாசம், சிக்கி சின்னாபின்னமான கணவன்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ