வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பல வித திருமன வீடியோக்கள் தினமும் பகிரப்படுகின்றன, இவற்றில் நம் நாட்டின் பல இடங்களில் நடக்கும் பல வித சடங்குகளை பற்றி காண முடிகின்றது. இவற்றில் சடங்குகள் பற்றி நாம் தெரிந்துகொள்வதோடு, நம் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாகும் பல விஷயங்களையும் நாம் காண்கிறோம். சில சமயம் மணமக்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள், சில சமயம் கோவத்தையும் காட்டுகிறார்கள். சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத சில நிகழ்வுகளும் நடந்துவிடுகின்றன. 


அப்படி ஒரு திருமண நிகழ்வின் வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் முதலில் என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள முடியாது. புரிந்த பின்னர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, சிரிப்பும் வருகிறது. 


வீடியோவில், மண மேடையில் மணமகனும் மணமகளும், மணமகளின் தோழியும் நின்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் மாலை மாற்றும் சடங்குக்கு அனைவரும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அப்போது யாரும் எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்கின்றது. இதைப் பார்த்து மணப்பெண் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விடுகிறார். 


மேலும் படிக்க | கெத்து காட்ட நினைத்த பாம்புக்கு பல்பு தந்த பூனை: வீடியோ வைரல்


அதிர்ச்சியில் மணப்பெண்: நடந்தது என்ன? 


சில நொடிகள் உள்ள வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் சடங்குக்காக காத்திருப்பதை காண முடிகின்றது. மணமகள் தன் முன் நிற்கும் மணமகனின் கழுத்தில் மாலை போட்டு விட்டார். அவரது தோழியும் அருகில் நிற்கிறார். இது வரை அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது. மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க வேண்டிய தருணம் வருகிறது. மணமகன் மாலையை எடுத்தார். ஆனால் அதை மணமகளின் கழுத்தில் போடுவதற்கு பதிலாக, அவரது தோழியின் கழுத்தில் போட்டுவிடுகிறார். 


மாப்பிள்ளையின் இந்த செயலைக் கண்டு சுற்றி நின்றவர்கள் அதிர்ந்தனர். கையில் தட்டுடன் நின்றுகொண்டுருந்த மணமகளின் தோழிக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. மணமகளோ அதிர்ச்சியின் உச்சகட்ட நிலையில் இருந்தார். தனது தோழியின் கழுத்தில் மணமகன் மாலை இட்டதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாப்பிள்ளை ஏன் இப்படி செய்தார் என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.


மேலும் படிக்க | 'திடீரென அசைந்த மலை' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்


இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன அந்த வீடியோவை இங்கே காணலாம்: 



மணமகன் மணம்களின் தோழிக்கு மாலை அணிவிப்பதை பார்த்தால் அவர் வேண்டுமென்றே இப்படி செய்து விட்டாரா, அல்லது தெரியாமல் செய்தாரா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது இன்ஸ்டாகிராமிலும் ashiq.billota என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | அசால்டா எஸ்கேப் ஆன வரிக்குதிரை..ஜஸ்ட் மிஸ்: திக் திக் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ