கெத்து காட்ட நினைத்த பாம்புக்கு பல்பு தந்த பூனை: வீடியோ வைரல்

viral video: சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பூனையை எதிர்கொண்ட பாம்புக்கு என்ன நடக்கிறது என்பதை காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2023, 02:22 PM IST
  • பூனை தனது காலால் ஒரு அறை கொடுப்பதை வீடியோவில் காணலாம்.
  • பாம்பை பயமின்றி எதிர்கொள்ளும் பூனையின் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
கெத்து காட்ட நினைத்த பாம்புக்கு பல்பு தந்த பூனை: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பொதுவாக வனவிலங்குகளுக்கு இடையேயான சண்டை என்றால் பயங்கரமாக இருக்கும். பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். பெரும்பாலும் பாம்பு கீரிக்கு இடையே சண்டை என்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாக சில நிகழ்வுகள், பாம்பு சிறுத்தை, பாம்பு பருந்து, பாம்பு நாய் இடையே சண்டைகள் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி இருக்கின்றன. அந்த வகையில், பாம்பு பூனை இடையேயான பயங்கர சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | ’நண்பா ஹெல்ப் மீ’ சிப்ஸ் திருட குரங்குக்கு உதவும் நாய்: பலே கில்லாடிங்கப்பா..! வைரல் வீடியோ

இதில் வீட்டின் பின்புறத்தில் விளையாடும் பூனையுடன் ஆபத்தான பாம்பு ஒன்று சண்டையிடுவதை நாம் காணலாம். இதன் போது பாம்பு மெதுவாக பூனையை நோக்கி நகர்வதைக் காணலாம். அதே சமயம், பூனையும் தன்னை எச்சரித்துக்கொண்டு பாம்பை எதிர்கொள்ளத் தயாராகி வருவதைக் காணலாம். இதற்குப் பிறகு, பாம்பு வாயைத் திறந்து தாக்கத் தொடங்கும்போது, ஒரு சில மைக்ரோ செகண்ட்ஸ் தருணம்தான் பூனை, பாம்பின் தலையை கீழே அழுத்தி பாம்பை வீழ்த்துகிறது. பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் பூனை கீரி சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பாம்பு – பூனை பயங்கர சண்டையின் வைரல் வீடியோ

இந்த வீடியோ @TerrifyingNatur என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை ஏற்கனவே 13.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பெரும்பாலானோர் அந்த வீடியோவின் கீழ் பூனையைப் பாராட்டி கருத்துகளை எழுதியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாம்புகளை விட பூனைகளுக்கு அதிக அனிச்சை செயல் இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர், எனவே பாம்பு பூனையால் எளிதில் வெல்லப்படுகிறது என கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | ’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News