முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் திருமண நிகழ்வு அல்லது மற்ற நிகழ்ச்சிகளின் போது நடனமாடுவதை நாம் பார்த்திருப்போம்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற நிகழ்வுகளை நாம் நேரடியாகவே பார்க்கின்றோம்.  அதிலும் தற்போது மணமேடையில் மணமகளும், மணமகனும் கூட இணைந்து நடனமாட தொடங்கிவிட்டனர்.  இத்தகைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் பலவும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்து வரும் சூழலில், பாக்தாத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | குத்தாட்டம் போட்ட மணமகன், வேற லெவலில் ஈடு கொடுத்து ஆடிய மணமகள்: வைரல் வீடியொ


பாக்தாத்தில் நடைபெற்ற திருமண வைபோவத்தின் போது மணப்பெண் பாடகர் லாமிஸ் கான் பாடிய சிரிய பாடலான 'மெய்ஸ்தாரா' எனும் பாடலுக்கு நடமாடியதால்  மணமகனும், அவரது குடும்பத்தினரும் ஆத்திரமடைந்தனர்.  அந்த பாடலின் அர்த்தம்  "நான் உன்மீது ஆதிக்கம் செலுத்துவேன், என் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கண்டிப்பாக நீ ஆளப்படுவாய், நீ என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் விதிக்கக்கூடிய கட்டளைகளை ஏற்று அதன்படி தான் நடப்பை நடப்பாய், நான் திமிரானவள்' என்பதாகும். 


இவ்வாறு திருமண நாளில் அனைவரின் முன்னிலையிலும் மணமகனின் தரத்தை தாழ்த்தும் விதமான பாடலுக்கு ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் குடும்பம், மணமகள் வீட்டாருடன் சண்டையிட்டது.  பின்னர் அதிகபட்சமாக ஆத்திரமடைந்த மணமகன் திருமண நாளிலேயே அப்பெண்ணை விவாகரத்து செய்தார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த பாடலால் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல்முறையல்ல.  கடந்த ஆண்டு ஜோர்டானில் புதுமணப்பெண் தனது கணவன் தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை, இந்த பாடலுடன் இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இணையவாசிகளின் மனம் கவர்ந்த வீடியோ; குட்டி யானையை தூக்கி விடும் அம்மாவின் கரிசனம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR