இணையவாசிகளின் மனம் கவர்ந்த வீடியோ; குட்டி யானையை தூக்கி விடும் அம்மாவின் கரிசனம்!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் குட்டி யானைக்கு தாய் உதவும் காட்சி அனைவர் மனதையும் மிகவும் கவர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2022, 04:37 PM IST
  • குட்டி யானைக்கு உதவும் தாய் யானை.
  • IFS அதிகாரி பகிர்ந்துள்ள வீடியோ.
  • யானையின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
இணையவாசிகளின் மனம் கவர்ந்த வீடியோ; குட்டி யானையை தூக்கி விடும் அம்மாவின் கரிசனம்!  title=

Baby Elephant Video: விலங்குகளில் யானை மிகவும் புத்திசாலியாக கருதப்படுகிறது. அதோடு, யானை மிகவும் அமைதியான இயல்புடையது. மனிதர்களைப் போலவே, அது எப்போதும் தனது குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும். யானைகள் தொடர்பான பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். யானைகள் ஒன்றுக்கொன்று உதவுவதை பல வீடியோக்களில் காணலாம். இது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. இந்த காணொளியில் குட்டி யானைக்கு தாய் உதவுவது அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது

சரிவில் ஏற முடியாமல் தவித்த குட்டி யானை

கரடுமுரடான பாதையில் யானைக்கூட்டம் செல்வதை வைரலான வீடியோவில் காணலாம். பெரிய யானைகளைத் தவிர, பல குட்டி யானைகளும், இந்தக் கூட்டத்தில் அடங்கும். யானை கூட்டம் சென்ற பாதையில் ஒரு இடத்தில் சரிவான பாதையை கடக்க நேரிடுகிறது. பெரிய யானைகள் அந்த சரிவில் எளிதாக ஏறும், ஆனால் சிறிய யானையால் அந்த சரிவில் ஏற முடியவில்லை.

ALSO READ | Snake Dance: பனைமரத்தில் பாம்பு! மரமேறும் நாகப்பாம்பு நடனமாடும் வீடியோ வைரல்!!

குட்டி யானை பலமுறை அந்த சரிவில் ஏற முயன்றும் அதன் கால் மீண்டும் மீண்டும் சறுக்கி விடுவதையும், பல முயற்சிகளுக்கு பிறகும் அந்த குட்டி யானையால் சரிவில் ஏற முடியாமல் போவதை வீடியோவில் காணலாம். குட்டி யானையின் இந்த அவாஸ்தையை கண்ட, அதன் தாய், தனது குட்டிக்கு உதவ களம் இறங்குகிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

தாய் யானை கீழே இறங்கி உதவுகிறது

யானையின் தாய் கீழே இறங்கி வந்து குட்டிக்கு பின்னால் இருந்து அதனை மேலே தள்ளுவதை வீடியோவில் காணலாம். யானையின் தாய் மட்டுமின்றி மற்றொரு யானையும் குழந்தையை மேலே ஏற்ற முயற்சிப்பதைக் காணலாம். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினரின் உதவியுடன், அந்த குட்டியானை மேலே வந்தது, பின்னர் அனைத்து யானைகளும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றன.

இந்த வைரலான வீடியோவை IFS அதிகாரி சுஷாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த அவர், 'யானைகளின் சமூகப் பிணைப்பு மிகவும் வலுவானது. குட்டி யானை மேலே ஏற அம்மாவும் அதன் அத்தையும் உதவுகிறார்கள். வீடியோ மனதை தொடும். இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்த்து அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ | மனித காதலை மிஞ்சும் மயிலின் காதல்: நெட்டிசன்களின் இதயத்தை கனமாக்கிய வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News