தனது அழகான மணமகளைப் பார்த்து `out of control` ஆன மணமகன் செய்த காரியம்: வைரல் வீடியோ
தனது அழகான மணமகளை தூக்கிக்கொண்டு மணமகன் செல்லத் தொடங்குகிறார். மணமகனின் இந்த அசத்தலான காதல் இணையவாசிகளின் இதயத்தை கொள்ளைக்கொண்டுள்ளது.
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியொ இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்தியாவில் திருமணங்களின் சீசன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. எனினும், இணையத்தை வலம் வரும் திருமண வீடியோக்களின் சீசனுக்கு முடிவே இல்லை. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் (Viral Video) ஆகி வருகின்றது.
இந்த வீடியோவில், மணமகன் தனது மணமகளை திருமணத்திற்கு முன்பே ஆசையாக சுமந்து செல்வதைக் காண முடிகின்றது. யாரும் பார்க்கவில்லை என எண்ணி காதலின் வெளிப்பாடாக மணமகன் செய்த இந்த செயல் கேமராவில் பதிவாகியுள்ளது.
மணமகன் மணமகளை தூக்கிச் செல்கிறார்
மணமகள் திருமணத்திற்கு தயாராகி வருவதை வீடியோவில் காண முடிகிறது. சிவப்பு வண்ண லெஹங்கா மற்றும் பல வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துப்பட்டாவில் மணமகள் மிகவும் அழகாக இருக்கிறார். அப்போது அங்கு திடீரென மணமகன் வருகிறார்.
மணமகனும் முழுமையாக அலங்காரத்துடன் காணப்படுகிறார். தனது வருங்கால மனைவி அழகு தேவதையாக ஜொலிப்பதைக் கண்ட மணமகன் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவரை தூக்கிக்கொண்டு செல்லத் தொடங்குகிறார்.
ALSO READ | மணமகள் ஆடிய பாடலால் வெறுப்பான மணமகன் விவாகரத்து!
தனது அழகான மணமகளைப் பார்த்து மணமகனால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பது வீடியோவில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மணமகள் அருகில் வரும் மணமகன், உன்னை தூக்கிச்செல்லவா என சைகையில் கேட்கிறார். மணமகளும் சைகையிலேயே அதற்கு பதில் அளித்து விடுகிறார்.
பிறகு என்ன? தனது அழகான மணமகளை தூக்கிக்கொண்டு மணமகன் செல்லத் தொடங்குகிறார். மணமகனின் இந்த அசத்தலான காதல் இணையவாசிகளின் இதயத்தை கொள்ளைக்கொண்டுள்ளது.
இணையத்தில் பட்டையைக் கிளப்பும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இணையத்தில் கிளிக் ஆனது மணமகன் மற்றும் மணமகளின் கெமிஸ்ட்ரி
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சமூக ஊடக பயனர்கள் மணமகன் மற்றும் மணமகளின் கெமிஸ்ட்ரியை மிகவும் விரும்புகிறார்கள். மணமகன் மற்றும் மணமகளின் அலங்காரம், அவர்களது காதல் மற்றும் தங்கள் மனம் போல் இருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பண்பு ஆகியவற்றை நெட்டிசன்கள் (Netizens) வியந்து பாராட்டி பல வித கமெண்டுகள்ளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் wedabout என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR