வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


சமூக ஊடகங்களில் தினமும் பல திருமணங்களின் வீடியோக்கள் வெளிவருகின்றன. இந்த வீடியோக்களில் பெரும்பாலானவை மக்களை மகிழ்விப்பதற்காக தனித்தனியாக உருவாக்கப்பட்டவை. திருமணத்தில், அனைவரது கவனமும் மணமகன் மற்றும் மணமகள் மீது இருக்கும். இவர்கள் என்ன செய்தாலும் அது நேரடியாக கேமராவில் பதிவாகும். 


பெரும்பாலும் மணமக்கள் மறைக்க நினைக்கும் சில விஷயங்களும் கேமராவில் சிக்கி விடுவது உண்டு. திருமணத்தில் உள்ள பலரின் கவனம் மணமக்கள் மேல் இருந்தாலும், மணமகன் கவனம் மணமகள் மீதும், மணமகள் கவனம் மணமகன் மீதும் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அப்படி இல்லாமல் போனால் என்ன நடக்கும்? இதற்கு விடை அளிக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 


வேறொரு பெண்ணுடன் கடலை போட்ட மணமகன் 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு பிறகு மணமக்கள் மேடையில் அமர்ந்துள்ளதை காண முடிகின்றது. மணமகன் அருகில் மற்றொரு பெண் அமர்ந்திருக்கிறார். மாப்பிள்ளை அவரிடம் பேச ஆரம்பித்து, தொடர்ந்து அவரிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.


மேலும் படிக்க | கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை 


இதைப் பார்த்து மணமகள் கடுப்பாவதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகள் மாப்பிள்ளையை தட்டி அவரை தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிக்கிறார். ஆனால், மாப்பிள்ளை அதை கண்டுகொள்ளாமல் மற்றொரு பெண்ணிடமே பேசிக்கொண்டு இருக்கிறார். 


மணமகள் கடுப்பாகி மணமகனை அழைப்பதையும், மணமகன் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் திருமணத்திற்கு வந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. 


கடலை போட்ட மணமகன் மீது கடுப்பான மணமகள் வீடியோவை இங்கே காணலாம்:



மணமகளின் பாணியை ரசிக்கும் இணையவாசிகள் 


திருமணத்தின் இந்த வீடியோவில், மணமகள் மணமகனை மீண்டும் மீண்டும் தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சிப்பதை காண முடிகின்றது. அவரது இந்த கியூட் கடுப்பு இணையவாசிகள் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ unzip.world என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவுக்கு 10 லட்சத்தை விட அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. பல வித கமெண்டுகளையும் மக்கள் அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமை, சைலண்டா சிங்கம் நிற்க காரணம் என்ன: வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!