கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை

Snake Viral Video: உணவுக்காக பாம்புக்கும் பாம்புக்கும் சண்டை. மனிதனுக்கும் பாம்புகளுக்கும் உள்ள ஒற்றுமையை பார்த்து வியக்கும் இணையவாசிகள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 13, 2022, 01:42 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
கோழிக்குஞ்சுக்காக சண்டையிடும் 2 பாம்புகள்: வென்றது யார்? வைரல் வீடியோவில் விடை title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்புகள் பெரும்பாலும் பண்ணைகள் மற்றும் கோழிக் கூடங்களுக்குள் புகுந்து குஞ்சுகளைக் கொன்று உண்ணும், அல்லது கோழி முட்டைகளை உண்ணும். பாம்புகள் சில சமயம் பெரிய கோழிகளையும் கொல்வதுண்டு. ஆனால் பெரிய கோழிகளை பாம்புகளால் எளிதில் ஜீரணிக்க முடியாது. 

இருப்பினும், பாம்புகள் வயது முதிர்ந்த கோழியை உண்பதற்காகவோ அல்லது அதன் மூலம் குஞ்சுகளை அணுகுவதற்காகவோ அவற்றை பிடிப்பதுண்டு. சிறைபிடிக்கப்பட்ட இரண்டு பாம்புகளுக்கு தலா ஒரு குஞ்சு உணவாக அளிக்கப்பட அப்போது நடக்கும் ஒரு நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ‘snake._.world’ என்ற பக்கத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 1,685 லைக்குகளைப் பெற்றுள்ளது. வீடியோ தொடங்கும் போது, ​​​​ஒரு கம்பளத்தின் மீது இரண்டு பாம்புகள் காணப்படுகின்றன. இரண்டு பாம்புகளும் வாயில் ஒவ்வொரு கோழிக்குஞ்சை கவ்விக்கொண்டுள்ளன. 

​​மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் மியாவ்..மனதை மயக்கும் வீடியோ! 

வலதுபுறத்தில் இருக்கும் பாம்பு பேராசை கொண்டு, குஞ்சுகள் இரண்டையும் வாயால் எடுத்து இழுத்துச் செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. இதைத் தொடர்ந்து மற்றொரு பாம்பு, தனக்கு சொந்தமான இரையை பெற அதன் குஞ்சுக்குப் பின் செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது. 

இருப்பினும், இறுதியில், முதல் பாம்பு குஞ்சை மிக இறுக்கமாகப் பிடித்திருக்கிறது என்றும், அதை தன் பிடியில் இருந்து போக விடாது என்பதையும் மற்றொரு பாம்பு அறிந்துகொள்கிறது. பசியால் வாடினாலும், பாம்பு குஞ்சை விட்டுவிட்டு சென்று விடுகிறது. 

பாம்புக்கும் பாம்புக்கும் நடக்கும் போட்டியின் வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

இந்த வீடியோ இணையவாசிகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பசி என்று வந்துவிட்டால், பாம்பாக இருந்தாலும் பங்குகொள்ள தயாராக இல்லை என்பதும், தனக்கு கிடைத்த உணவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏராளமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க | உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News