மகேஷ் பாபுவின் GAP hoodie விலை தெரிந்தால் சாதாரண மக்களுக்கு மலைப்பாக இருக்கும். ஆனால் இது அவரது ’ஆடம்பரமான’ வாழ்க்கை முறைக்கு (lifestyle)  சான்றாகும். சினிமாத்துறையின் பிரபல நட்சத்திரங்களில் மிகவும் பணிவானவர்களில் ஒருவர்  மகேஷ் பாபு ஒருவர். அவர் உண்மையில் மிகவும் எளிமையானவர், அவர் தனது எளிமையான வாழ்க்கை முறையை நிரூபித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகேஷ் பாபு உண்மையில் மிகவும் அழகானவர், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர். அவர் வயதுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை, அவர் என்ன மார்க்கண்டேயனா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார். மகேஷ் பாபு தனது சரியான வாழ்க்கை முறைக்காகவும், மிகவும் சாதாரணமான இயல்புத்தன்மைக்காகவும் அறியப்படுகிரார். தன்னை தாழ்த்திக் கொண்டு பிறருக்கு முக்கியத்துவம் தரும் மகேஷ்பாபுவுக்கு உண்மையில் அனைவரும் சிறப்பாக மரியாதை கொடுக்கின்றனர். 


உலகத்திற்கு தன்னுடைய தாழ்மையான பக்கத்தை அவர் மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார். உலகளாவிய அளவில் புகழ்பெற்ற மகேஷ்பாபுவின் (Mahesh Babu) ரசிகர் பட்டாளம் எண்ணிலடங்காத்து. ஆனால், நடிகர் மகேஷ்பாபு எப்போதும் எளிமையாக ஆடை அணிந்து மென்மையாக பேசுபவர். அவரிடம் பகட்டோ, தெனாவட்டோ காணப்படாது. சமீபத்தில், அவர் நம்ரதா ஷிரோட்கர் (Namrata Shirodkar), சீதார கட்டமநேனி (Sitara Ghattamaneni) மற்றும் கெளதம் கட்டமனேனி (Gautam Ghattamaneni) என குடும்பத்தினருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றார்.  


அதன்பிறகு அவர்கள் இந்தியா திரும்பும் போது, மகேஷ்பாபு ஹூடி (hoodie) மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். வழக்கமாக விமான நிலையத்திற்கு சாதாரணமாக செல்பவர்களே, மிகவும் கவனத்துடன் அலங்காரம் செய்து கொண்டிருப்பது வழக்கம்.  ஆனால் மகேஷ்பாபுவோ அப்படி பகட்டுக்கு ஆசைப்படுபவர் இல்லை என்பதை இந்த நிகழ்ச்சி புரிய வைத்த்து. 



விமானத்தில் ஏறவிருந்தபோது தனது அன்பான கணவரின் படத்தை நம்ரதா பகிர்ந்துள்ளார். அவர் ஒரு ஜிஏபி ஹூடி (GAP hoodie) அணிந்திருந்தார். அவர் ஒரு உணவு விடுதியில் உட்கார்ந்திருப்பதைக் காண முடிந்தது. இது மிகவும் இயல்பானது, ஆனால் மகேஷ் பாபு அந்த அதிகாலை நேரத்திலும், அலங்காரம், மேக்-அப் எதுவும் இல்லாமலும் அழகாக இருக்கிறார்.


மகேஷ் பாபுவின் அன்பான மனைவியால் கணவனைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்த முடியவில்லை. "அதிகாலை 3 மணிக்கு யார் இப்படி இருக்க முடியும்!! நீங்கள் மிகவும் அழகான மனிதர் ஒரு விமானத்தில் ஏற காத்திருக்கும் நேரத்திலும் கூட அழகாக இருக்கிறீர்கள்.... #liveforlove #lifeisbeautiful #blessed #gratitude @urstrulymahesh" என்று நம்ரதா கணவனை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.  



இப்போது, இந்த ஹூடியின் விலையை யூகிக்க முடியுமா? இதன் விலை சுமார் 2,000 ரூபாய் தான்... ஆடைகளுக்கு நிறைய செலவு செய்வது மகேஷ் பாபுவுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.  


மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா (Sarkaru Vaari Paata) திரைப்படத்தில் நடிக்கிறார்.  புது திரைப்ப்ட அறிவிப்பும் அதன் போஸ்டரும்  (poster) மகேஷின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. டோலிவுட் இளவரசருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று கூறப்படுகிரது.  கிச்சா சுதீப் (Kiccha Sudeep) இந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் அவர் வேறு சில திரைப்படங்களுக்கு ஒப்புக் கொண்டதால் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.


Read Also | பணிக்கு திரும்பும் அனுஷ்கா விராட் கோலி in pics


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR