சமூக வலைத்தளங்களில் திடீரென்று பல நிகழ்வுகள், புகைப்படங்கள் ட்ரெண்டாக்கப்படும்.  எதிர்பாராமல் பதிவிடப்படும் பல விஷயங்கள் பல மில்லியன் லைக்குகளை வாரி குவிக்கும் அளவிற்கு சென்றுவிடும்.  அந்த வகையில் சாதாரணமாக ஒரு கோழியிட்ட முட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்து ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Ice dance: வெண்பனி மலையில் இந்திய ராணுவத்தினரின் டான்ஸ்! வீடியோ வைரல்


இந்த முட்டையின் புகைப்படம் 55.5 மில்லியன் லைக்ஸ்களை பெற்று கின்னஸ் சாதனை படைத்தது மட்டுமல்லாது, 2018-ல் 18 மில்லியன் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்த Kylie Jenner-ன் சாதனையை முறியடித்து முன்னுக்கு வந்து இருக்கிறது.  கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி பகிரப்பட்ட இந்த முட்டையின் புகைப்படம் பதிவிட்ட பத்து நாளில் 30 மில்லியன் லைக்ஸுகளை அள்ளியது.


 



பின்னர் மூன்று வருடம் கழித்து @world_record_egg-- என்ற பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த முட்டையின் புகைப்படமானது தற்போது 55.5 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது.  தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிக்கப்படும் புகைப்படம் இது என்று Guinness World Records தனது ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.   மேலும் 2019-ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி பகிரப்பட்ட இந்த புகைப்படம் உலக சாதனையை படைத்துவிட்டது, அதிகமானோர் விரும்பும் புகைப்படமாக மாறி 18 மில்லியன் லைக்ஸ் பெற்று முன்னணி வகித்த Kylie Jennerன் சாதனையை முறியடித்துவிட்டது என்கிற கேப்ஷனும் இடம்பெற்று இருந்தது.  2018-ல் பிப்ரவரி மாதம் அமெரிக்க மாடல் மற்றும் டிவி நட்சத்திரமான Kylie Jenner அவரது மகள் ஸ்டோர்மி இந்த உலகிற்கு வருவதை குறித்து பதிவிட்டு இருந்தார் , இது அந்த கால கட்டடத்தில் 18 மில்லியன் லைக்ஸுகளை பெற்று முன்னணி வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | நண்பர்களாக மாறி இணையத்தை கலக்கும் சிங்கம் மற்றும் நாய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR