நண்பர்களாக மாறி இணையத்தை கலக்கும் சிங்கம் மற்றும் நாய்!

சிங்கம் மற்றும் நாயிற்கு இடையேயான நட்பு பிணைப்புமிக்க வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 03:55 PM IST
  • வளர்ப்பு பிராணிகளின் குறும்புகளை கண்டு ராசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
  • கரடுமுரடாக இருக்கும் விலங்குகளுக்குள், எவ்வளவு மென்மைத்தன்மை இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
நண்பர்களாக மாறி இணையத்தை கலக்கும் சிங்கம் மற்றும் நாய்! title=

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும், வளர்ப்பு பிராணிகள் செய்யும் குறும்பும் அதிகளவில் கவனத்தை ஈர்த்து விடும்.  இத்தகைய செயல்கள் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை குறைத்து மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையும்.  வளர்ப்பு பிராணிகளின் குறும்புகளை கண்டு ராசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.  இதுபோன்ற இரு விலங்குகளின் செயல் தான் நெட்டிசன்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.  அதிகமாக நாம் பூனைகள், நாய்கள், பறவைகள், யானைகள் இவைகள் குறும்பு செய்யும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம்.  ஆனால் நாயும், சிங்கமும் ஒன்றுடன் ஒன்று நட்பு பாராட்டி விளையாண்டு மகிழ்வதை நாம் பார்த்திருக்க மாட்டோம். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள விலங்குகளின் இந்த பாசப்பிணைப்பு  வீடியோ பார்ப்பவர்களை சிலிர்க்க செய்துள்ளது.

ALSO READ | தனது உயரத்தால், விமானத்தின் உயர் வகுப்பில் பயணம் செய்த உயர்ந்த மனிதர்!

இன்ஸ்டாகிராமில் doglovers என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அடர்நிற நாய் ஒன்றும், வெளிர்நிற சிங்கம் ஒன்றும் உற்சாகமாக ஒன்றோடு ஒன்று விளையாடுகிறது.  இவை இரண்டுமே ஒன்றாக வளர்க்கப்பட்டவை, அதன் காரணமாக இரு விலங்குகளும் ஒன்றோடு ஒன்று நட்பு பாராட்ட ஆரம்பித்துவிட்டது.  அவர்களுக்குள் ஒரு கட்டுக்கடங்காத அளவில் பாச பிணைப்பு உள்ளது.  இந்த வீடியோ மூலம் கரடுமுரடாக இருக்கும் விலங்குகளுக்குள், எவ்வளவு மென்மைத்தன்மை இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் இந்த வீடியோவை பதிவிட்டவர், அதற்கு பொருத்தமான கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார், அதில், இது ஆச்சர்யமான ஒரு பாச பிணைப்பு, இருவரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள், இப்பொது இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்கள்.  இந்த வீடியோ இதுவரை 45 லட்சம் பார்வைகளை கடந்ததோடு மட்டுமில்லாமல், பல எமோஜிகளையும், லைக்குகளையும் வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தாகம் எடுத்த பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் தருமப்பிரபு: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News