மணல்வீடு நிலையானது அல்ல என்று சொல்வார்கள், கடலில் மணலில் வீடு கட்டினால், கடலலை வந்து அடித்துச் சென்றுவிடும். அதைப் பார்த்து குழந்தைகள் வருத்தப்படுவார்கள். சிறிய அளவிலான மணல் வீடுகள் தானே அடித்துச் செல்லப்படும் என்று நினைத்து, டென்மார்க்கில் உலகின் மிக உயரமான மணல்கோட்டை கட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டென்மார்க்கில் 20 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு கிட்டத்தட்ட 5,000 டன் மணலைக் கொண்டு மணற்கோட்டை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது , கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தி வைரலாகிறது. 



டென்மார்க்குக்கு முன்னதாக ஜெர்மனியில் மணல்கோட்டை கட்டப்பட்டிருந்தது. அது 17 மீட்டர் உயரம் கொண்டது. 2019ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜெர்மனின் மணற்கோட்டையே இதுவரை உலகின் மிக உயரமான மணல் கோட்டை என்ற பெருமையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.


தற்போது டென்மார்க்கில் கட்டப்பட்டுள்ள 20 மீட்டர் உயர மணல்கோட்டையே உலகின் மிகப்பெரிய கோட்டையாகிவிட்டது. இது மண்கோட்டையல்ல, மணற்கோட்டை.


2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்ட கோட்டையை விட மூன்று மீட்டர் உயரம் அதிகமாக கொண்டது என கின்னஸ் சாதனை கூறுகிறது. டென்மார்க்கின் மணல் கோட்டையை உருவாக்கிய சிற்பி வில்பிரட் ஸ்டிஜெர் என்ற டச்சுக்காரர். உலகின் 30 சிறந்த மணல் சிற்பிகள், அவருக்கு இந்த மாபெரும் மணற்கோட்டையைக் கட்ட உதவினார்கள்.  


Also Read | தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் -கமீலா நாசர் நெகிழ்ச்சி!


உலகம் முழுவதும் COVID-19இன் தாக்கம் நிலவும் நிலையில் அதன் தீவிரத்தை மனதில் கொண்டு, மணல்கோட்டையின் உச்சியில் ஒரு வைரஸின் மாதிரியை நிறுவியிருக்கிறார் மணற்சிற்பக் கலைஞர்.


ப்ளோகஸ் (Blokhus) என்ற ஊரில் கட்டப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பு, அங்கு வசிப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்சியளிக்கிறது. அதிலும் பிரம்மாண்டமான மணற்கோட்டை உலக சாதனை பதிவையும் ஏற்படுத்தியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
 
கடும் உறைபனி இருக்கும் வரை மணல் கோட்டை இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் வரை மணற்கோட்டை சரியாமல் ஓங்கி உயர்ந்து நிற்கும்.


Also Read | Wimbledon வெற்றியை பரிசு கொடுத்து கொண்டாடும் ஜோகோவிச்; வீடியோ வைரல்


இந்த மணல் கோட்டையின் சிறப்புகள் என்ன தெரியுமா?


  • 4860 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

  • 69.4 அடி (21.16 மீ) உயரம் கொண்டது.

  • இந்த கோட்டை கிட்டத்தட்ட 5000 டன் எடையிலான மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. 

  • முதல் பார்வையில் எகிப்து நாட்டின் பிரபல கட்டமைப்பான பிரமிட் (pyramid) தோற்றத்தை நினைவூட்டுகிறது இந்த மணற்கோட்டை

  • வில்பிரட் ஸ்டிஜர் என்ற டச்சுக்காரர் இந்த மணற்சிற்பத்தை, கோட்டையாக கட்டியிருக்கிறார். உலகின் 30 சிறந்த மணல் சிற்பிகள் இந்த கலைப்படைப்பின் உருவாக்கத்திற்கு உதவியுள்ளனர்.

  • உலகம் முழுவதும் COVID-19 இன் சக்தியைக் குறிக்க படைப்பாளி விரும்பியதால் கோட்டையின் கிரீடம் ஒரு வைரஸின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  

  • கோட்டையை உருவாக்க 10% களிமண் பயன்படுத்தப்பட்டது. மணற்கோட்டை கட்டி முடிந்ததும், அதை சுற்றி பசையைப் போல பூச இந்த களிமண் பயன்படுத்தப்பட்டது.  

  • குளிர் மற்றும் வேகமாக காற்று வீசினாலும் தாங்கும் வலுவுடன் இந்தக் அதிசய கோட்டை கட்டப்பட்டுள்ளது.  


Also Read | Desi Ghost Rider: ஊஞ்சலாடும் சோளக்கொல்லை பொம்மை, பீதியில் நெட்டிசன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR