தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் -கமீலா நாசர் நெகிழ்ச்சி!

நாசரின் மனைவி கமிலா நாசர் (Kameela Nassar), "தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 03:20 PM IST
  • தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் -கமிலா நாசர்.
  • மகன் பிறந்தநாள் அன்று, என் வீட்டிற்கு வந்து என் மகனுடன் தம்பி விஜய் பேசி செல்வார்.
  • கோர்ட் தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துயிருக்கிறார்
தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்  -கமீலா நாசர் நெகிழ்ச்சி! title=

Kameela Nassar vs Actor Vijay: வெளிநாட்டு சொகுசு கார் வாங்கிய விசயத்தில் கோர்ட்டின் சர்ச்சையான பேச்சு மற்றும் தீர்ப்புகள் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பேச்சு பொருளாக மாறியுள்ளார் நடிகர் விஜய் . இன்னிலையில் தன் குடும்பத்திற்கும் விஜய்-க்குமான (Actor Vijay)உறவை பற்றி சமீபத்திய பேட்டியில் நடிகர் நாசர் பேசியது தற்போது வைரல் ஆனது.  

நடிகரும் இயக்குனருமான மனோபாலா (Director Manobala) தனது யூடியூப் தளத்திற்காக நடிகர் நாசரை (Actor Nassar) சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளார். அதில் விஜய்க்கும் உங்கள் குடும்பத்திற்குமான உறவை பற்றி கேட்கையில் மனம் திறந்து பேசியுள்ளார் நாசர்.  என் முதல் மகன் தீவரமான விஜய் ரசிகர்.  சிறிது காலத்திற்கு முன் மிகப்பெரிய விபத்து ஒன்று நடந்து கிட்டத்தட்ட உயிர் போகும் நிலை ஆனது. அதிலிருந்து தப்பித்த என் மகன் ஞாபக சக்தியை இழந்தார்.  ஆனால் என் மகனுக்கு ஞாபகம் இருக்க கூடிய ஒரே விசயம் விஜய்.  நாங்கள் அவருடைய நண்பர் பெயரைதான் சொல்கிறார் என்று நினைத்தோம். 

பின்பு தான் தெரிந்தது அது நடிகர் விஜய் என்று.  அவரது பாட்டுகளை மட்டும் இன்றுவரை கேட்கிறார். இப்போது வீட்டிற்கு சென்றாலும் விஜய் பாட்டு ஓடி கொண்டிருக்கும். இந்த விசயத்தை அறிந்த விஜய் எப்போதும் தன் மகன் பிறந்தநாள் அன்று, என் வீட்டிற்கு வந்து என் மகனுடன் இருந்து பேசி செல்வார். அவர் எங்கள் வீட்டில் ஒருவர் என்று அப்பேட்டியில் கூறியிருந்தார். 

ALSO READ | Rolls Royce கார் விவகாரத்தில் தன் மீதான விமர்சனத்தை நீக்கக் கோரும் நடிகர் விஜய்

இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்ததை பார்த்த நாசரின் மனைவி கமிலா நாசர் (Kameela Nassar), "தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் (Vijay Video Viral) ஆகி வருகிறது. தற்போது தனது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துயிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

Actor Nassar Family

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News