குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர், கோவில் நிகழ்ச்சி லட்சக்கணக்கான பணத்தை மழையாக வாரி இறைத்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலத்தின் பட்டன் பகுதியை சேர்ந்தவர் அல்பேஸ் தாக்கூர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் நலிவுற்ற மக்களுக்கு ஆதரவாக நிதி திரட்ட பிரபல பாடகி கீதா ரூபாரி தலைமையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சில் தானும் பங்கேற்று அசத்தினார்.



நிதி வேண்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தானும் நிதியினை பண மழையாக இறைத்தார். இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


முன்னதாக கடந்த மே மாதம், குஜராத் மாநிலம் வலசாத் பகுதியில், நாட்டுபுற பாடகருக்கு ரூ.50 லட்சம் பண மழையாக இறைத்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.


குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்தில் உள்ளது கல்வடா கிராமம். இந்த கிராமத்தின் தலைவர் ஆஷிஷ் படேல் என்பவர், தங்கள் கிராமத்திற்கென தனி ஒரு ஆம்புலன்ஸ் வாங்க நிதி திரட்ட விரும்பினர்.


அந்த வகையில், புகழ்பெற்ற நாட்டுபுற பாடகரை கொண்டு அக்கிராமத்தில் இசை நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் சேரும் பணத்தினை கொண்டு ஜலராம் மானவ் சேவா சங்கத்திற்கு நிதி திரட்டவும், அப்பணத்தினை கொண்டு ஆம்புலன்ஸ் வாங்கவும் முடிவு செய்தனர்.


இந்நிகழ்ச்சியில் பாடல் பாடிய பாடகருக்கு அப்பகுதி மக்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அவரின் மீது இறைத்தனர். இதன் மூலம் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது.