இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆதார் எண்ணை வெளியிடுமாறு இணையதள ஹாக்கர் Elliot Alderson சவால் விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் நடந்த விவாதத்தின் போது, பயனாளர் ஒருவர் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், ஆதார் வழங்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.எஸ்.ஷர்மாவிடம், `உங்களது ஆதார் தகவல்களை வெளியிட முடியுமா’ என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக ட்விட்டரில் அவரும் பதிவிட்டார்.



இதனையடுத்து ஆர்.எஸ்.ஷர்மாவின் மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபை எண் ஆகியவற்றை ஹாக்கர் Elliot Alderson வெளியிட்டார். மேலும் ஆர்.எஸ் ஷர்மாவின் இந்த தகவல்களை அவரது ஆதார் எண் மூலமே பெற்றதாகவும் Elliot Alderson அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.


இச்சம்பவத்திற்கு பிறகு ஆதார் எண்ணை வெளியிட பொதுமக்கள் அச்சப்படுவது மட்டும் அல்லாமல், ஆதார் எண் தனிமனித விவரங்களை வெளியிடுவதில்லை என்று கூறப்பட்டு வரும் கருத்தினையும் மருத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது Elliot Alderson பிரதமர் மோடியின் ஆதார் எண்னை கோரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.