கடந்த ஆறு நாட்களாக தனது ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வந்தார். 
இதையடுத்து, தான் அரசியலில் இறங்குவேனா?, இல்லையா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார். நான் அரசில் களத்தில் இறங்குவீன் என்று அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முடிவை பின்தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 


இதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தத்தோடு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 


நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்; என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்று தெரிவித்திருந்தார்.