இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட மாநிலம், ராஞ்சி நகரில் பிறந்த மகேந்திர சிங் தோனி 2004-ம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்து தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் துவங்கினார். அணியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே தன் தனிப்பட்ட ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்திய அணி சரிவை நோக்கிச் செல்லும்போது இறுதியில் களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றதில் தோனிக்கு பெரும் பங்கு உண்டு. 


இதனால் இவர் சிறந்த ஃபினிஷர் என்றும் அழைக்கப்படுகிறார். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போது பல கோப்பைகளை தன்வசமாக்கிய பெருமை பெற்றவர். மிஸ்டர் கூல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியின் 37-வது பிறந்த நாள் இன்று.


இதை தொடர்ந்து, இவருக்கு பலரும் தனகளது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், பிசிசிஐ ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. பிசிசிஐ-ன் ட்வீட்டில், "ஸ்பெஷலான மனிதருக்காக மிகவும் ஸ்பெஷலான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளது. இறுதி வரை வீடியோவை பாருங்கள். கியூட்னஸ் அலெர்ட்!" என்று பதிவிட்டுள்ளது. 


அந்த வீடியோவில் கேப்டன் விராட் கோலி, "நீங்களும், உங்க வயதும் எப்போதும் ஃபிட்டாகவே உள்ளது. உங்களது தலைமையின் கீழ் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். உங்களுடன் எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கெட்டுக்கு இடையே நீங்கள் வேகமாக ஓடுவதை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று கூறினார்.


விராட்டை தவிர சக அணி வீரர்களான, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.


வீடியோ முடியும் தருவாயில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக ஸிவா தோனி பேசினார். தந்தைக்கு பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தோனியின் செல்ல மகள், "உங்களுக்கு வயதாகிவிட்டது" என்று குறும்பாக கிண்டல் செய்துள்ளது ரசிக்க வைத்துள்ளது. 


இதோ அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது!