திருமணத்திற்கு முன் குழந்தையா? ஹார்டிக் பாண்ட்யா-வின் அதிரடி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் அவரது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரபலங்கள் இருவரும் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பான ஹார்டிக்கின் இன்ஸ்டாகிராம் இடுகையில்: "நடாசாவும் நானும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டோம், அது இன்னும் சிறப்பாக வரவிருக்கிறது. மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உயிரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹார்டிக், நடாசாவுடனான தனது நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்திருந்தார்.
நடாசாவுடன் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் நிச்சயதார்த்தம் செய்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய அணியின் பல உறுப்பினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முன் குழந்தை அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஹார்டிக்.