இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும். சுவாரஸ்யங்கள் நிறைந்த வன வாழ்க்கை, உயிருக்கான போராட்டங்கள் நிறைந்தது. அந்த வகையில், இணைய உலகில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சியில் உறைய வைக்கும் காட்சிகள் எல்லாம் வனப்பகுதிகளில் அடிக்கடி பார்க்கலாம். சிங்கம், சிறுத்தை மற்றும் புலி ஆகிய பயங்கரமான விலங்குகள் நடத்து. வேட்டை மிரட்சியை ஏற்படுத்தும். ஆனால், சில சமயங்களில் எதிர்பார்ப்பிற்கு மாறாக, வலிமையான விலங்குகளிடம் இருந்து, ட்சாதுர்யமாக தப்பிக்கும் காட்சிகளையும் காணலாம். அப்படியான ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வேட்டை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுத்தைகள் மிகவும் ஆபத்தான விலங்கு. இவை ஒரே போட்டில் இரையை வீழ்த்தக் கூடியது. அதே சமயம் தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், (Porcupine) ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட விலங்குகளாகும். தன்னை தாக்கும் விலங்குகளிடம் இருந்து, தன்னை காத்துக் கொள்ள முள்ளம் பன்றிகளின் மேல் உள்ள இந்த முட்கள் உதவும். அந்த வகையில், தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த ஒரு முள்ளம்பன்றி குட்டியை சிறுத்தை கபளீகரம் செய்ய நினைக்கையில், அதனை மிகவும் சாமர்த்தியமாக எதிர் கொண்டு காக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:




சுப்ரியா சாஹூ என்ற ஐஏஎஸ் அதிகாரி ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முள்ளம்பன்றி பெற்றோர்கள் தங்கள் குட்டிகளுடன் சாலையை கடக்கும் போது, சிறுத்தை ஒன்று அவர்களை தாக்குவதற்காக எதிரில் வருவதைக் காணலாம். இருவரும், குட்டிகளை இடையில் வைத்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அதன் கூரிய முட்களால் சிறுத்தையை குட்டிகளை நெருங்க விடாமல் தடுத்தன. வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 3 லட்சத்தி 86 அயிரத்திற்கும் மேற்பட்ட பாட்வைகளையும் 4,800 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 872க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. கருத்துகள் பிரிவில் "அற்புதம்" மற்றும் "அரிய காட்சிகள்", "பெற்றோர்கள் வாழ்க" போன்ற வார்த்தைகள் நிரம்பியுள்ளன.


மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்


மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ