Viralvideo: குப்புற விழுந்து தவித்த ஆமை.. காப்பாற்றிய காட்டெருமை!
ஆமை ஒன்று தலைகீழாக, அதாவது குப்புற கவிழ்ந்து தடுமாறிக் கொண்டிருக்க காட்டெருமை அதனை காப்பாற்றும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது.
இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களை கவர்ந்து, வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துவிடும். அப்படியான ஒரு வீடியோ தான் இன்றைய வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குப்புற கவிழ்ந்து தவிக்கும் ஆமைக்கு, காட்டெருமை உதவி செய்கிறது. இதனை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து, காட்டெருமையை வாழ்த்துகின்றனர்.
மேலும் படிக்க | ஆட்டிடம் வீண் வம்பு பண்ணும் பாம்பு ...குசும்புக்கார பாம்பின் வைரல் வீடியோ
gozul man என்ற யூ டியூப் பக்கத்தில் பகிர்ப்பட்டுள்ள வீடியோ மொத்தம் 15 விநாடிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், அந்த 15 விநாடிகளுக்குள் இடம்பெற்றிருக்கும் இந்த காட்சி உங்களை பரவசப்படுத்திவிடும். வீடியோவின் தொடக்கத்தில், காட்டெருமை தனது கொம்புகளைக் கொண்டு தரையில் எதையோ முட்டுவது போன்று தெரிகிறது. என்னடா என்று உற்றுப் பார்த்தால், ஆமை ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.
சரி, காட்டெருமை அதனை தொந்தரவு செய்கிறதோ? என நீங்கள் எண்ணுவதற்குள் குப்புற கவிழ்ந்து கிடக்கும் ஆமையை, கொம்பைக் கொண்டு புரட்டி இயல்பு நிலைக்கு வருவதற்கு உதவி செய்கிறது. பின்னர், ஆமை இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது. காட்டெருமை அந்த உதவியை செய்த அடுத்த நொடி, கம்பி வேலிக்கு வெளியே இருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆரவாரக் குரல் எழுப்பி, "you did it friend, you did it" என அதனை மனதார பாராட்டுகின்றனர்.
இந்த வீடியோ யூடியூப்பில் மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விலங்குகள் நம்மை விட சிறந்தவை, ஆமைக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை அதுக்கு எப்படி தெரிந்தது? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என நெகிழ்ந்துபோய் கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், இத்தனை இரக்கம், புத்திசாலித்தனமான விலங்குகளை நாம் எப்படி மோசமாக நடத்துகிறோம்? என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!
எஃகு மற்றும் இரும்பு உலோகங்கள் உருகும்போது அவை முறையே நீலம் மற்றும் ஆரஞ்சு நிறமாக மாறும். ஆனால் வீடியோவில் இருக்கும் உலோகங்கள் வெண்மை நிறத்தில் உருகுகிறது. காலியத்தால் செய்யப்படும் உலோகங்களைப் பொறுத்தவரை, திரவமாக்கப்பட்ட பிறகும் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ