ஆட்டிடம் வீண் வம்பு பண்ணும் பாம்பு ...குசும்புக்கார பாம்பின் வைரல் வீடியோ

Snake and Sheep Viral Video | தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பாம்பு ஒன்று ஆட்டின் முதுகில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் சவாரி செய்வதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 22, 2023, 11:07 AM IST
  • பாம்பின் பலவிதமான வீடியோக்கள் இணையத்தில் நாம் பார்த்துள்ளோம்.
  • சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • பாம்பு மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாகும்.
ஆட்டிடம் வீண் வம்பு பண்ணும் பாம்பு ...குசும்புக்கார பாம்பின் வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பாம்புகள் பலவிதமான வீடியோவை நாம் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பாம்புகள் பயங்கரமான விலங்குகளில் ஒன்றாகும்.  அதேபோல் சிறுத்தை, புலி, சிங்கம் போன்றவை வேட்டைக்கார விலங்குகள் ஆகும். அந்தவகையில் இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பாம்பு மற்றும் ஆடு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் பாம்பு ஒன்று ஆட்டை  வாகனமாக்கியதை காணலாம். கற்பனை கூட செய்ய முடியாத ஒரு காட்சி நடுரோட்டில் காணப்பட்டது.

மேலும் படிக்க | முதலையை முதுகில் சுமக்கலாமா? உப்புமூட்டை தூக்க யாரும் கிடைக்கலை! டூ மச் வீடியோ வைரல்

ஆட்டின் மீது சவாரி செய்யும் பாம்பு
இந்த வைரலான வீடியோவில், பாம்புகள் நடுரோட்டில் நடந்து செல்வதைக் காணலாம். அப்போது ஒரு பாம்பு அங்கு குதித்து அங்கிருந்த ஆட்டின் முதுகில் சவாரி செய்வதை நாம் காணலாம். குசும்புத்தனமாக அந்த பாம்பு ஜாலியாக சவாரி செய்கிறது. இதில் அந்த பாம்பு அரசனாகவும், ஆடு செல்லப் பிராணியாகவும் இருந்ததைப் போல காட்சியில் தோன்றியது.

குசும்புக்கார பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணுங்கள்:

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை snakes_video__ தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாம்புடன் கோவிலுக்கு வந்து மாஸ் காட்டிய குட்டிப்பெண்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News