இளையதளபதி விஜய் நடிக்கும் 62 வது படத்தில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை அடுத்து நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஜய் 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விஜய்- கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் தலைப்பிற்கு ’சர்க்கார்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இத்திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள விஜய்க்கு பரிசளிக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்திற்கு "சர்கார்" என பெயரிடப்பட்டு விஜய் மாஸ் ஸ்டைலில் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.