மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.


கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்தை ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.


இயக்குனர் சுசீந்திரன் முதன்முறையாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் டீஸரை கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 


இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான காம்போவில் படம் உருவாகியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.