HIdden Beach: இயற்கையின் கொள்ளை அழகை இப்படி மறைக்கலாமா? பிரபஞ்ச ரகசியம் வீடியோ வைரல்
HIdden Beach Video Viral: இயற்கையை நாம் அறிந்துக் கொள்வதற்கும், பார்த்து ரசிப்பதற்கும், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவி அவசியமாகிறது. இது மறைக்கப்பட்ட கடற்கரையின் வைரல் வீடியோ
Nature Beauty Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பலவிதமான செய்திகளைக் கொடுத்தாலும், இயற்கை கொடுக்கும் செய்தி எப்போதும் மிகவும் வலுவானது. ஆனால், அந்த இயற்கையை நாம் அறிந்துக் கொள்வதற்கும், பார்த்து ரசிப்பதற்கும், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவி அவசியமாகிறது.
இயற்கையே அனைத்தும் என்றால், இயற்கையில் இருக்கும் அதிசயங்களை கண்டறிய தொழில்நுட்பம் உதவுகிறது. சொல்லப்போனால், இயற்கையை நம்முடன் அதிகமாக இணைப்பதற்கும், மனிதனால் செயற்கையாய் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. அதில் இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
இது தனி உலகம் என்றாலும், இதுவன்றி ஓரணுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு, இணைய சேவைகள் நம் வாழ்வை ஆக்ரமித்துவிட்டன.
மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் பயங்கர சண்டை: நம்ப முடியாத ட்விஸ்ட், வைரல் வீடியோ
இணையத்தில் வெளியாகும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமாக நாம் பல வித விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.
நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள மட்டுமல்ல, அறிவை வளர்த்தெடுக்கவும் இணையம் உதவுகிறது. அதிலும், இயற்கையின் காணுதற்கு அரிய கணங்களையும், இடங்களையும் பார்த்து ரசிக்க உதவும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் எப்போதும் உண்டு.
தற்போது இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில், தீவை போன்று அமைந்திருக்கும், ‘ஹிட்டன் பீச்’ அதாவது, மறைந்திருக்கும் கடற்கரை வீடியோ அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வைரலாகிறது. சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் இந்த வீடியோவை பாருங்கள்.
கின்றன. இவற்றின் சண்டையை பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போதும் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகின்றது.
இந்த வீடியோவில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. பொதுவாக இப்படி ஒரு சண்டையில் பாம்பு தான் வெற்றி பெறும் என அனைவரும் நம்புவார்கள். ஆனால், அதற்கு மாறான ஒரு விஷயம்தான் இதில் நடக்கிறது.
மேலும் படிக்க | முதலையின் வாய்க்குள் சென்று உணவை திருடிய கில்லாடி பூனை: திக் திக் வைரல் வீடியோ
பசுமையான தீவின் மேற்பரப்பில் ஒரு இடைவெளி துளை, ஏராளமான நிழல், சூரியன் மற்றும் படிக-தெளிவான நீரைக் கொண்ட ஒரு ரகசிய கடற்கரை இது. பிளாயா டெல் அமோர், இதை மறைக்கப்பட்ட கடற்கரை என்று அழைக்கின்றனர்.
இது மரியேட்டா தீவுகளில் அமைந்துள்ளது. மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்டாவிற்கு மேற்கே 22 கடல் மைல் தொலைவில் பண்டேராஸ் விரிகுடாவின் முகப்பில் அமைந்துள்ளது. இது ஏதோ ஒரு கற்பனையான இடம் என்று நினைத்துவிடவேண்டாம். பசிபிக் பெருங்கடலின் நீல நீரைக் கொண்ட அகலமான, மணல் நிறைந்த குகையாகும் இது.
மரியேட்டா தீவுகள் என்பது நீருக்கடியில் எரிமலை வெடிப்பால் உருவான தீவு ஆகும். இங்கு மக்கள் வசிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையான அதிசயங்களில் ஒன்றான இது, மெக்சிகன் அரசாங்கத்தின் இராணுவ சோதனைக்கு சிறந்த தளங்களாக அமைந்துள்ளன. 1900 களின் முற்பகுதியில், ஆயுதங்களும் பீரங்கிகளும் மெக்சிகன் குடிமக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் உள்ள மரியேட்டா தீவுகளில் சோதிக்கப்பட்டன
அதோடு, மரியேட்டா நிலப்பரப்பு அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. மறைக்கப்பட்ட கடற்கரையில் அழகிய நீர் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ