இணையத்தில் காட்டு விலங்குகள் தங்கள் இரையை விழுங்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் சமூக ஊடகங்களில் கவனத்தை  பெறும் ஒரு வீடியோ, வேட்டையாடுபவதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் சிங்கம், அவசியம் ஏற்படாவிட்டால் மனிதர்களுடனான தொடர்பைத் தவிர்ப்பதைக் காட்டுகிறது. மலைச் சிங்கம் ஒன்று, ஒரு வீட்டின் வெளியே புதர்களுக்குள் மறைந்திருந்து, சாலையில் நடப்பதை வேடிக்கை பார்க்கிறது. சரி, இதன் வேடிக்கைப் பார்க்கும் படலம் எத்தனை நேரம் தொடரும்? வேறு யாராவது வந்தால் தாக்காதா இந்த மலைச் சிங்கம் என்று வீடியோவை பார்க்கும் நமக்கு டென்சன் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், புலி மறைந்திருக்கும் காட்சிகளும், அதன் வேடிக்கை பார்க்கும் படலமும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மலை சிங்கம் ஒரு வீட்டின் வெளியே மறைந்திருக்கிறது.


மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்


அந்த வழியில் ஜாகிங் செய்யும் ஒருவரை அது உற்று பார்த்துக் கொண்டிருக்ககிறது. அந்த வழியாக செல்லும் மனிதர்களை தாக்க காத்துக் கொண்டிருக்கிறதா? என்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வீடியோ இது. இந்த பதற்றம் பார்க்கும் நமக்குத்தான்.... அங்கே ஜாலியாக ஜாகிங் செய்துக் கொண்டிருப்பவருக்கு சிங்கத்தின் பதுங்கல் தெரிந்தால், அவர் இப்படி ஆசுவாசமாக ஓடுவாரா? துண்டைக் காணோம் துணையைக் காணோம் என பதறியடித்துக் கொண்டு ஓடியிருப்பார


இந்திய வன அதிகாரி (IFS) சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், வீடியோ ஒரு வீட்டின் முன் ஒரு மலை சிங்கம் உலா வருவதுடன் தொடங்குகிறது. ஒருவர் சாலையில் ஜாகிங் செய்வதைப் பார்த்த சிங்கம், வீட்டின் வெளியே உள்ள செடிகளுக்குள் மறைந்துக் கொண்டது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.




"பெரும்பாலான சூழ்நிலைகளில் காட்டு விலங்குகள் மனிதர்களுடன் மோதலைத் தவிர்க்கும். அவை அச்சுறுத்தப்பட்டால் மட்டுமே செயல்படுகின்றன. மோதலைத் தவிர்ப்பதற்காக மலை சிங்கம் ஜாகிங் செல்பவர் தன்னை பார்க்க முடியாத அளவு முழுவதுமாக மறைந்துக் கொள்வதைக் காட்டும் சுவாரசியமான வீடியோ இது" என்று சுசாந்தா நந்தா அந்த வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க | சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்


இந்த வித்தியாசமான வீடியோ, டிவிட்டரில் பகிரப்பட்டதிலிருந்து 62,000 பார்வைகளையும் 4000 க்கும் மேற்பட்ட லைக்குக்களையும் பெற்றுள்ளது. 300க்கும் மேற்பட்ட பயனர்கள், இந்தப் பதிவை ரீட்வீட் செய்துள்ளனர். பல பயனர்கள் இந்த வீடியோவுக்கு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.


"உங்கள் கருத்தை என்னால் முழுமையாக ஏற்க முடியாது. ஆம், பெரும்பாலான விலங்குகள் மனிதர்களுடனான மோதலைத் தவிர்க்க முயல்கின்றன. ஆனால், சிங்கம், மறைந்திருந்து தாக்கும் இயல்புடையவை...தங்கள் இரையின் மீது பாய்வதற்கான சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும்" என்று ஒரு பயனர் எழுதினார்.


மற்றொரு பயனரும், அதேபோன்ற கருத்தையே பிரதிபலித்துள்ளார், "விலங்குகள் எப்போதும் மோதலைத் தவிர்க்கின்றன, ஆனால் இங்கே மலைச் சிங்கம் தன்னை மறைத்துக்கொள்வது, தனது இரையை வேட்டையாடுவதற்காகவே என்று தோன்றுகிறது" என்று அவர் எழுதி உள்ளார்.


மேலும் படிக்க | தும்பிக்கை அரண் அமைத்து குட்டியை பாதுகாக்கும் யானைகளின் பாச வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ